இந்திய பொருளாதாரத்தை பொறுத்தவரை, 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒரு முக்கியமான மாதமாக இருந்தது. 2022 பெப்ரவரி மாதம் உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை தொடர்ந்து உலகளாவிய பொருட்களின் விலைகள் அதிகரித்ததால், ரூபாயின் மாற்று விகிதம் முதல் முறையாக டொலருக்கு 80 வீதத்தை தாண்டியது.
இந்திய ரிசர்வ் வங்கி ரூபாயை உறுதியாக பாதுகாத்து, 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் 39 பில்லியன் டொலர் மதிப்புள்ள வெளிநாட்டு நாணயத்தை விற்றது.
2022-23 ஆண்டு காலப்பகுதியில் மொத்த அடிப்படையில் 213 பில்லியன் டொலர் மதிப்புடைய வெளிநாட்டு நாணயத்தை விற்றுள்ளது.
அதன் அடிப்படையில், சர்வதேச வர்த்தகத்தை ரூபாயில் தீர்த்து வைப்பது உட்பட உணவு உற்பத்தி, வெளிநாட்டு வரவுகளை அதிகரிக்க மற்றும் இந்தியாவின் டொலர் சார்ந்திருப்பதை குறைக்க புதிய வாய்ப்புகள் கிடைத்துள்ளன.
22 நாடுகளைச் சேர்ந்த வங்கிகளின் 92 சிறப்பு ரூபாய் வோஸ்ட்ரோ கணக்குகளை தொடங்க ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்திருந்தாலும், இந்திய ரூபாயில் சர்வதேச வர்த்தகத்தின் தீர்வு பெரியளவில் எடுக்கப்படவில்லை.
பொருளாதார நெருக்கடியில் உள்ள ரஷ்யாவுடன் ரூபாய் வர்த்தகம் மாற்றமடைந்து வருவதால், இந்திய அதிகாரிகள் இருதரப்பு வர்த்தக உடன்படிக்கைகள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.
இருதரப்பு வர்த்தக ஒப்பந்தங்களில் ரூபாயை சர்வதேசமயமாக்கலுக்கான ஒரு படியாகும் என்று இந்திய அரசாங்க அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். இது இரு நாடுகளின் உள்ளூர் நாணயங்களை ஊக்குவிக்கிறது.
இது ஒரு நீண்ட செயல்முறையாகும். இது ரூபாயை சர்வதேசமயமாக்குவதை நோக்கி மெதுவாக நகரும் ஒரு வழியாகும் என்று இந்திய நிதியியல் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM