மன்னாரில் அனுமதிப்பத்திரமின்றி கொண்டு சென்ற 2 ஆயிரம் கடலட்டைகள் உயிருடன் மீட்பு

Published By: Vishnu

03 Aug, 2023 | 12:20 PM
image

மன்னாரில் இருந்து அனுமதிப்பத்திரம் இன்றி குஞ்சு கடலட்டைகளை கொண்டு சென்ற இருவர் வியாழக்கிழமை (3) காலை மன்னார் பிரதான பாலத்தடியில் உள்ள சோதனை சாவடியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குஞ்சு கடலட்டைகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த சோதனை சாவடியில் வைத்து இராணுவத்தினரால் அவர்கள் பயணித்த வாகனம் சோதனைக்குட்படுத்தப்பட்ட போது கடலட்டைகள் அனுமதிப்பத்திரம் இன்றி கொண்டு செல்லப்பட்டமை தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட பல்லவராயன் கட்டுப்பகுதியைச் சேர்ந்த இரு சந்தேக நபர்களும் அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட கடலட்டைகளும் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் பலசரக்கு கடையில் போதை மாத்திரை...

2024-10-12 09:14:15
news-image

மத்திய, சப்ரகமுவ, மேல்,வடமேல் மற்றும் தென்...

2024-10-12 08:59:37
news-image

ஊழல் இனவாத அரசியல்வாதிகள் அரசியலில் இருந்து...

2024-10-12 08:54:44
news-image

இறுதி நேரத்தில் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட தமிதா...

2024-10-12 08:45:47
news-image

ஜனாதிபதித் தேர்தல் வெற்றியை ஏனைய தேர்தல்களிலும்...

2024-10-12 02:12:57
news-image

மட்டக்களப்பு மாவட்டத்தில் 22 அரசியல் கட்சிகள்,...

2024-10-12 02:05:39
news-image

வாள்வெட்டில் காயமடைந்தவர் மரணம் - பலி...

2024-10-11 22:29:55
news-image

நுவரெலியா மாவட்டத்தில் 17 அரசியல் கட்சிகள்,...

2024-10-11 21:03:53
news-image

ஜனாதிபதி மற்றும் சமந்தா பவர் ஆகியோருக்கு...

2024-10-11 20:17:54
news-image

2024 பொதுத் தேர்தலில் 22 மாவட்டங்களில்...

2024-10-11 18:28:36
news-image

ஸ்திரமான நிலையில் நாட்டின் பொருளாதாரம் ; ...

2024-10-12 08:47:33
news-image

திருகோணமலை மாவட்டத்தில்  17 அரசியல் கட்சிகள்,...

2024-10-11 17:48:46