ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டம் நேற்று (02) நடைபெற்றபோது மனுஷ நாணயக்கார மற்றும் ஹரீன் பெர்னாண்டோ ஆகியோரை மீண்டும் கட்சிப் பதவிகளில் அமர்த்துவதற்கு தீர்மானித்ததாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
இவர்கள் இருவரின் உறுப்புரிமையும் இதுவரை தடை செய்யப்பட்டிருந்ததாகவும் பொதுச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கட்சியின் தலைமையகமான புறக்கோட்டை, சிறிகொத்தாவில் செயற்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதன்போது ஐக்கிய தேசிய கட்சியின் 77ஆவது கட்சி மாநாட்டை நடத்துவது மற்றும் கட்சியின் அரசியலமைப்பை மாற்றுவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 10ஆம் திகதி கட்சி மாநாட்டை ஜனாதிபதியின் தலைமையில் நடத்த தீர்மானிக்கப்பட்டதாகவும் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM