யாழில் அண்மைக்காலங்களில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்கள் என சந்தேககிக்கப்பட்டு கைதுசெய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அண்மைக்காலமாக யாழில்  இடம்பெற்ற பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும்  ஐந்து நபர்கள்  கடந்த 31 ஆம் திகதி யாழ்ப்பாண பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் இருந்து 7 கூரிய வாள்கள், இரண்டு கைக்கோடரி ,சிறிய கத்தி , கைத்தொலைபேசி,  முகமூடி தொப்பி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.