பாகிஸ்தான் பிர­தமர் நவாஸ் ஷெரிப் மூன்­று  நாள் உத்­தி­யோ­க­பூர்வ விஜ­ய­மொன்றை மேற்கொண்டு இன்று திங்­கட்­கி­ழமை இலங்கை வரு­கிறார். இன்று கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தை வந்­த­டையும் பாகிஸ்தான் பிர­தமர் நவாஸ் ஷெரிப் மற்றும் பேகம் கல்ஸும் ஷெரிப் அம்­மையார் ஆகி­யோரை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க வர­வேற்­க­வுள்ளார்.

இலங்கை விஜ­யத்தின் போது பாகிஸ்தான் பிர­தமர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க உள்­ளிட்ட பல்­வேறு தரப்­பி­ன­ருடன் பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்­ள­துடன் இலங்­கைக்­கும்-­பா­கிஸ்­தா­னுக்­கு­மி­டை­யி­லான இரு­த­ரப்பு உறவை வலுப்­ப­டுத்­து­வது தொடர்­பிலும் விரி­வாக ஆலோ­சனை நடத்­த­வுள்ளார்.

அத்­துடன் இந்த விஜ­யத்தின் போது

இலங்­கைக்கும் பாகிஸ்­தா­னுக்­கு­மி­டையில் சில உடன்­ப­டிக்­கை­களும் கைச்­சாத்­தி­டப்­ப­ட­வுள்­ள­துடன் பாகிஸ்தான் பிர­தமர் வர­லாற்றுப் புகழ்­மிக்க கண்டி தல­தா­மா­ளி­கைக்கும் விஜயம் செய்­ய­வுள்ளார்.

இன்று இலங்கை வரும் பாகிஸ்தான் பிர­த­ம­ருக்­கான உத்­தி­யோ­கப்­பூர்வ வர­வேற்பு வைபவம் ஜனா­தி­பதி செய­ல­கத்தில் இடம்­பெ­ற­வுள்­ள­துடன் அவ­ருக்கு இரா­ணுவ அணி­வ­குப்பு மரி­யா­தையும் அளிக்­கப்­ப­ட­வுள்­ளது.

அத­னை­ய­டுத்து பாகிஸ்தான் பிர­த­ம­ருக்கும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்­கு­மி­டையில் இரு­த­ரப்பு பேச்­சு­வார்த்தை நடை­பெறும். இதன்­போது பாகிஸ்தான் பிர­த­ம­ருக்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன விருந்­து­ப­சா­ர­மொன்­றையும் வழங்­க­வுள்ளார்.

அத்­துடன் சுகா­தாரம், விஞ்­ஞானம், தொழிற்­நுட்­ப­வியல், வியா­பாரம், புள்­ளி­வி­ப­ர­வியல், இரத்­தி­னங்­களும் ஆப­ர­ணங்­களும் உள்­ளிட்ட துறை­களில் இரு­த­ரப்பு உடன்­ப­டிக்­கை­களும் இந்த இரு­த­ரப்பு சந்­திப்­ப­போது கைச்­சாத்­தி­டப்­ப­ட­வுள்­ளன.

மேலும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர ஆகி­யோ­ரு­டனும் பாகிஸ்தான் பிர­தமர் இரு­த­ரப்பு சந்­திப்­புக்­களை நடத்­த­வி­ருக்­கிறார். சர்­வ­தேச கற்­கை­க­ளுக்­கான லக்ஷ்மன் கதிர்­காமர் நிறு­வ­னத்தின் அழைப்பின் பேரில் கொழும்பு சினமன்ட் லேக்சைட் ஹோட்­டலில் பாகிஸ்தான் பிர­தமர் விசேட விரி­வு­ரை­யொன்­றையும் ஆற்­ற­வுள்­ள­துடன் இலங்கை- பாகிஸ்தான் தொடர்­புகள் என்ற தலைப்பில் இந்த விரி­வுரை இடம் பெற­வுள்­ளது.

இதே­வேளை இரு­த­ரப்பு சந்­திப்­புக்­க­ளை­ய­டுத்து நாளை கண்­டிக்கு விஜயம் செய்­ய­வுள்ள பாகிஸ்தான் பிர­தமர் தல­தா­மா­ளி­கைக்கு செல்­ல­வுள்­ள­துடன் முஸ்லிம் பள்­ளி­வாசல் ஒன்றின் நிகழ்­விலும் கலந்­து­கொள்வார். அத்­துடன் பேரா­தனை பூங்­கா­விற்கு செல்­ல­வுள்ள பாகிஸ்தான் பிர­தமர் அங்கு தனது இலங்கை விஜ­யத்­திற்­கான ஞாப­கார்த்­த­மாக தாவ­ர­மொன்றை நட­வுள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கடந்த 2013 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய அரச தலைவர் மாநாட்டில் கலந்து கொள்ளும் நோக்கில் இலங்கைக்கு விஜயமேற்கொண்டிருந்தார். அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்தவருடம் ஏப்ரல் மாதம் பாகிஸ்தானுக்கு அரச விஜயமொன்றை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.