மலையக எழுச்சிப் பயணத்துக்கு ஆதரவளிக்கும் பேரணியின் ஊர்வலம் நாளை கிளிநொச்சியில்!   

02 Aug, 2023 | 01:57 PM
image

மாண்புமிகு மலையக மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்றுவரும் தலைமன்னார் முதல் மாத்தளை வரையிலான மலையக எழுச்சிப் பயணத்துக்கு ஆதரவு சேர்க்கும் வகையில், பேரணியொன்று நாளை வியாழக்கிழமை (03) காலை 9 மணிக்கு கிளிநொச்சி டிப்போ சந்தியில் இருந்து நடைபயணத்தை ஆரம்பிக்கவுள்ளது. 

மாண்புமிகு மலையக மக்கள் அமைப்பின் கூட்டிணைவில் வட மாகாண ஏற்பாட்டுக் குழு வெளியிட்ட ஊடக அறிக்கையினூடாக இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :

இந்த நடைபயணம் கிளிநொச்சி டிப்போ சந்தி முதல் வைரவர் கோவில் வரை இடம்பெறும். 

வைரவர் கோவிலில் இருந்து வாகன பேரணி ஊடாக 55ஆம் கட்டையை சென்றடைந்து, 55ஆம் கட்டை முதல் இரணைமடு சந்தி வரை நடைபயணம் இடம்பெறும். 

இதனையடுத்து, இரணைமடு சந்தியில் இருந்து வாகனப் பேரணியாக இந்துபுரம் தேவாலயம் சென்று, இந்துப்புரம் தேவாலயம் முதல் பல்கலைக்கழக சந்தி வரை நடைபயணம் இடம்பெறும்.

அடுத்து, பல்கலைக்கழக சந்தியில் இருந்து வாகன பேரணியாக சென்று, திருமுறிகண்டி கோயில் பகுதியில் நடைபயணம் இடம்பெறும்.

திருமுறிகண்டியில் இருந்து வாகன பேரணியாக மாங்குளம் சென்று, மாங்குளம் யுவசக்தி அலுவலகத்துக்கு முன்னாலிருந்து மாங்குளம் புனித அக்னேசு தேவாலயம் வரை நடைபயணம் இடம்பெறும்.

அதனை தொடர்ந்து இப்பேரணி மாங்குளத்தில் இருந்து வாகனப் பேரணியாக கனகராயன் குளத்துக்கு சென்று, கனகராயன் குளம் நகரப் பகுதியில் நடைபயணம் இடம்பெறும்.

இதனையடுத்து இப்பேரணி கனகராயன் குளத்தில் இருந்து வாகன பவனியூடாக புளியங்குளத்தை அடையும். 

புளியங்குளம் முத்து மாரியம்மன் கோவிலில்  இந்த கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட நடை பயண குழுவினருடன் யாழ்ப்பாண மாவட்ட நடைபயண குழுவினரும் இணைந்துகொள்வர். 

முத்து மாரியம்மன் ஆலயத்தில் வவுனியா மாவட்ட நடைபயண ஏற்பாட்டுக் குழுவினர் ஒழுங்கமைக்கப்பட்ட வழிபாடுகளில் கலந்துகொண்டு, அவர்களுடன் இணைந்து அங்கிருந்து புளியங்குளம் நகரப் பகுதி வரை நடைபயணம் இடம்பெறும்.

அடுத்ததாக, இவ்விரு பேரணியினரும் புளியங்குளத்தில் இருந்து வாகனப் பேரணியூடாக ஓமந்தைக்கு சென்று, ஓமந்தை நகரப் பகுதியில் நடைப்பயணம் இடம்பெறும்.

இதனையடுத்து ஓமந்தையில் இருந்து வாகனப் பேரணியூடாக தாண்டிக்குளம் சென்று, தாண்டிக்குளம் நகரப் பகுதியில் நடைபயணம் இடம்பெறும்.

பின்னர், தாண்டிக்குளத்தில் இருந்து வாகனப் பேரணியூடாக வவுனியா பழைய பேருந்து நிலையத்துக்கு சென்று, பழைய பேருந்து  நிலையத்துக்கு முன்பாக நடைபயணம் இடம்பெறும்.

அதன் பின்னர், வவுனியா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மண்டபத்தில் நாளை பிற்பகல் 3 மணிக்கு மாண்புமிகு மலையக மக்கள் கூட்டிணைவின் மலையக எழுச்சிப் பயணத்தின் வவுனியா ஏற்பாட்டுக் குழு நடத்தும் நடைப்பயணத்தின் நோக்கம் குறித்து மலையகம் 200 தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் கலை கலாசார நிகழ்வுகள் மற்றும் சிறப்புரைகள் இடம்பெறும்.

பின்னர், பேரணியினர் அன்றிரவு வவுனியாவில் ஓய்வெடுத்துவிட்டு, மீண்டும் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (04) காலை 5 மணிக்கு வவுனியா கந்தசாமி கோவிலில் இருந்து மதவாச்சி நோக்கி நடை பயணம் தொடரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடல் மார்க்கமாக கொண்டுவரப்பட்ட போதைப்பொருட்களுடன் இவ்வருடத்தில்...

2024-09-09 11:46:28
news-image

பாக்குமரம் வெட்டிய இளைஞன் தவறி விழுந்து...

2024-09-09 11:40:22
news-image

விசா விவகாரத்தினால் இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு ஆபத்து...

2024-09-09 11:50:40
news-image

மோட்டார் சைக்கிள் - வேன் மோதி...

2024-09-09 11:28:56
news-image

பாணந்துறை கடலில் மூழ்கி இளைஞன் மாயம்

2024-09-09 11:12:58
news-image

சஜித்திற்கு ஆதரவு குறித்து எந்த குழப்பமும்...

2024-09-09 10:56:33
news-image

ஜா எலயில் ரயில் - கார்...

2024-09-09 10:35:33
news-image

வவுனியா குடிவரவு - குடியகல்வு திணைக்களத்திற்கு...

2024-09-09 10:28:46
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் ரயில் நிலைய அதிகாரி,...

2024-09-09 09:58:01
news-image

களுத்துறை சிறைக்குள் போதைப்பொருட்களைக் கொண்டு சென்ற...

2024-09-09 09:48:51
news-image

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் இளைஞன் படுகாயம்

2024-09-09 11:20:56
news-image

தென்மேற்குப் பகுதிகளில் மழையுடனான வானிலை அதிகரிக்கும்...

2024-09-09 09:43:10