மன்னாரில் இருந்து வாகனம் ஒன்றில் உயிருடன் மறைத்து கொண்டு செல்லப்பட்ட சுமார் 150 கிலோ கிராம் எடை கொண்ட அரிய வகை கடல் ஆமையை மன்னார் விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் செவ்வாய்க்கிழமை (1) மாலை மீட்டுள்ளது டன் வாகன சாரதியையும் கைது செய்துள்ளனர்.
வாகனம் ஒன்றில் ஆமை கடத்தப்படுவதாக பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செளத்பார் பிரதான வீதி ரெலிக்கொம் சந்தி பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வாகனம் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தபோது குறித்த வாகனத்தில் சூட்சுமமான முறையில் ஆமை மறைத்து வைக்கப் பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
மீட்கப்பட்ட கடலாமை நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னர் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் கை அளிக்கப்பட உள்ள நிலையில் தற்காலிகமாக பாதுகாக்கப்பட்டு வருகின்றது.
குறித்த கடலாமையை வாகனத்தில் கொண்டு சென்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வாகன சாரதி மேலதிக விசாரணைகளின் பின்னர் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM