நடப்பு சம்பியன் ஜெவ்னா கிங்ஸை 8 விக்கெட்களால் வென்றது தம்புள்ள ஒளரா

01 Aug, 2023 | 08:21 PM
image

(ஆர். பிரேமதாச அரங்கிலிருந்து நெவில் அன்தனி)

கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற லங்கா பிறீமியர் லீக் போட்டியில் நடப்பு சம்பியன் ஜெவ்னா கிங்ஸை 8 விக்கெட்களால் மிக இலகுவாக தம்புள்ள ஒளரா வெற்றிகொண்டது.

தம்புள்ள ஒளரா அணி பந்துவீச்சாளர்களின் கட்டுபாடான பந்துவீச்சுகளும் அவிஷ்க பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ் ஆகியோரது சிறப்பான துடுப்பாட்டங்களும் அவ்வணியின் இலகுவான வெற்றிக்கு வழிவகுத்தன.

இப் போட்டியில் ஆரம்பம் முதல் தடுமாற்றம் அடைந்த ஜெவ்னா கிங்ஸ் எந்த சந்தர்ப்பத்திலும் தம்புள்ள ஒளராவுக்கு சவால் விடுக்கவில்லை. தனது ஆரம்பப் போட்டியில் அசத்திய ஜெவ்னா கிங்ஸ் இந்த போட்டியில் முதலாவது தோல்வியைத் தழுவியது. தம்புள்ள ஒளரா முதலாவது வெற்றியைப் பதிவுசெய்தது.

ஜெவ்னா கிங்ஸினால் நிர்ணயிக்கப்பட்ட 130 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தம்புள்ள ஒளரா 16.2 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 132 ஓட்டங்களைப் பெற்று வெற்றியிட்டியது.

ஆரம்ப விரர்களான அவிஷ்க பெர்னாண்டோவும் அணித் தலைவர் குசல் மெண்டிஸும் எதிரணி பந்தவீச்சாளர்களை சிதறடித்து 49 பந்துகளில் 76 ஓட்டங்களைப் பகிர்ந்து பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

அவிஷ்க பெர்னாண்டோவை போல்ட் செய்து இணைப்பாட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தவர் விஜயகாந்த் வியாஸ்காந்த் ஆவார்.

32 பந்துகளை எதிர்கொண்ட அவிஷ்க பெர்னாண்டோ 6 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 52 ஓட்டங்களையும் குசல் மெண்டிஸ் 29 ஓட்டங்களையும்  பெற்று ஆட்டம் இழந்தனர்.

துடுப்பாட்ட வரிசையில் தரம் உயர்த்தப்பட்ட சதீர சமரவிக்ரமவுடன் இணைந்த குசல் ஜனித் பெரேரா பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 47 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார். பகிரப்பட்ட இந்த 47 ஓட்டங்களில் குசல் ஜனித் பெரேராவின் பங்களிப்பு ஆட்டம் இழக்காத 34 ஓட்டங்களாகும். 22 பந்துகளை எதிர்கொண்ட அவர், 3 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களை விளாசினார்.

சதீர சமரவிக்ரம 12 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

முன்னதாக அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த ஜெவ்னா கிங்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 129 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

ஜெவ்னா கிங்ஸ் அணியில் அதிரடி ஆட்ட வீரர் டேவிட் மில்லர் முதல் தடவையாக இடம்பெற்றதால் இரசிகர்களுக்கு பெருவிருந்து கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் இரசிகர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கினார்.

மொத்த எண்ணிக்கை 20 ஓட்டங்களாக இருந்தபோது ரஹ்மானுல்லா குர்பாஸ் (14) ஆட்டம் இழந்தார்.

தொடர்ந்து சரித் அசலன்கவும் தௌஹித் ஹ்ரிடோயும் 55 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஆனால் ஓட்ட வேகம் போதுமானதாக இருக்கவில்லை.

தௌஹித் ஹ்ரிடோய் 24 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்த சொற்ப நேரத்தில் ப்ரியமல் பெரேரா 5 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

இந் நிலையில் சரித் அசலன்கவும் டேவிட் மில்லரும் ஓட்ட வெகத்தை அதிகரிக்க முயற்சித்தனர்.

சரித் அசலன்க 56 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோத சிக்ஸ் ஒன்றை விளாச முயற்சித்து பவுண்டறி எல்லையில் பிடிகொடுத்து ஆட்டம் இழந்தார்.

டேவிட் மில்லர் 18 பந்துகளை எதிர்கொண்ட போதிலும் 14  ஓட்டங்களை மாத்திரமே பெற்றார்.

திசர பெரேரா (6), ஹார்டஸ் வில்ஜோன் (4) ஆகியோர் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறினர்.

பந்துவீச்சில் பினுர பெர்னாண்டோ 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

ஆட்டநாயகன்: அவிஷ்க பெர்னாண்டோ.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

19ஆவது வடக்கின் சமர்:  அபிஜோய்ஷாந்த் குவித்த...

2026-03-06 18:54:08
news-image

இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா இறுதிப் போட்டியில்...

2026-03-05 23:47:04
news-image

இந்தியாவை பலமான நிலையில் இட்டார் சஞ்சு...

2026-03-05 21:05:12
news-image

ரி20 உலகக் கிண்ண இரண்டாவது அரை...

2026-03-05 18:52:40
news-image

நியூஸிலாந்தை உலகக் கிண்ணப் இறுதிப் போட்டியில்...

2026-03-05 18:38:16
news-image

மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுநராக ...

2026-03-05 17:16:35
news-image

கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் :...

2026-03-05 15:21:45
news-image

வடக்கின் போர் ஆரம்பம்

2026-03-05 15:18:36
news-image

ஐசிசியின் இணக்கப்பாட்டுடன் கிரிக்கெட் தொடர்பான அடுத்த...

2026-03-05 12:44:11
news-image

தென் ஆபிரிக்காவை சிதறடித்து ஃபின் அலன்...

2026-03-05 13:26:59
news-image

தென் ஆபிரிக்காவுக்கு கைகொடுத்தார் மார்க்கோ ஜென்சன்,...

2026-03-04 21:26:36
news-image

மேற்கிந்தியத் தீவுகளில் இரண்டு வகை கிரிக்கெட்...

2026-03-04 20:56:50