அஸ்வெசும நலன்புரி செயற்திட்ட மேன்முறையீடு, முறைப்பாடுகள் பரிசீலனை முடியும் வரை சமுர்த்தி கொடுப்பனவு வழங்கப்படும் - நிதி அமைச்சு

01 Aug, 2023 | 07:39 PM
image

(இராஜதுரை ஹஷான்)

அஸ்வெசும நலன்புரித் திட்டம் தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள மேன்முறையீடு மற்றும் முறைப்பாடுகள் ஆகியவற்றை பரிசீலனை செய்து இறுதி தீர்மானம் எடுக்கும் வரை சமுர்த்தி கொடுப்பனவுகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என நிதி பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்வதற்கு இதுவரை 10 இலட்சம் வங்கி கணக்குகள் தொடர்பான தகவல்கள் நலன்புரி சபைக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

ஆகவே நலன்புரி கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ள தகுதியுள்ளவர்கள் புதிதாக வங்கி கணக்குகளை ஆரம்பிக்க வேண்டும். இதற்காக அரச வங்கிகள் விடுமுறை நாட்களிலும் திறந்திருக்கும்.

அஸ்வெசும நலன்புரித் திட்டம் தொடர்பில் நிதி பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

சமுர்த்தி நலன்புரி கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ளும் குடும்பங்களில் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு செயற்திட்டத்தில் உள்வாங்கப்படாத 393,094 குடும்பங்களுக்கு சமுர்த்தி கொடுப்பனவுகளை தொடர்ந்து வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சமுர்த்தி பயனாளிகளில் 1,280000 குடும்பங்கள் அஸ்வெசும நலன்புரித் திட்டத்துக்கு விண்ணப்பித்துள்ளார்கள்.இந்த எண்ணிக்கையில் 887,653 குடும்பங்கள் அஸ்வெசும நலன்புரித்துக்கு அமைய கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ள தகுதியுடையவர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவ்விடயம் தொடர்பி;ல் நிதி அமைச்சர்,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்த அமைச்சரவை யோசனைக்கு அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அஸ்வெசும நலன்புரித் திட்டம் தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள மேன்முறையீடு மற்றும் முறைப்பாடுகள் ஆகியவற்றை பரிசீலனை செய்து இறுதி தீர்மானம் எடுக்கும் வரை சமுர்த்தி கொடுப்பனவுகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

1,7922,265 குடும்பங்கள் அஸ்வெசும நலன்புரித் திட்டத்துக்கு அமைய நலன்புரி கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ள தகுதியுடையவர்களாக உள்ளனர். 

இவர்களில் 9,046,612 பேர் நலன்புரி கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ள புதிதாக இணைக்கப்பட்டுள்ளனர். அஸ்வெசும நலன்புரித் திட்டத்தில் 20 இலட்ச குடும்பங்களுக்கு குறுகிய மற்றும் நீண்டகால அடிப்படையில் நிவாரணம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் மேன்முறையீடு மற்றும் முறைப்பாடு தொடர்பி;ல் பரிசீலனை செய்து அந்த இலக்கை அடைய முடியும்.

அத்துடன் சிரேஷ்ட பிரஜைகள்,நீரிழிவு நோயாளர்கள்,விசேட தேவையுடைவர்களுக்கு வழங்கப்படும் நலன்புரி கொடுப்பனவுகள் வழமை போல் வழங்கப்படுகிறது. இதற்கமைய சிரேஷ்ட பிரஜைகளுக்கான கொடுப்பனவை தபால் நிலையங்களிலும்,நீரிழிவு நோயாளர்கள்,விசேட தேவையுடையவர்கள் பிரதேச செயலக பிரிவுகள் ஊடாகவும் நிவாரண கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ள முடியும்.

சிறுவர் பராமரிப்பு நிலையங்கள்,சிரேஷ்ட பிரஜைகள் மற்றும் விசேட தேவையுடையவர்கள் மத்திய நிலையங்களில் உள்ள 11,660 பேருக்கு வழமை போல் நிவாரண கொடுப்பனவுகள் வழங்கப்படும்.

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்வதற்கு இதுவரை 10 இலட்சம் வங்கி கணக்குகள் தொடர்பான தகவல்கள் நலன்புரி சபைக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. ஆகவே நலன்புரி கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ள தகுதியுள்ளவர்கள் புதிதாக வங்கி கணக்குகளை ஆரம்பிக்க வேண்டும்.இதற்காக அரச வங்கிகள் விடுமுறை நாட்களிலும் திறந்திருக்கும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right