ஐந்து அம்சக்கோரிக்கையினை முன்வைத்து 69 ஆவது சுதந்திர தினமான நாளை மறுதினம் சனிக்கிழமை யாழ்.மாவட்ட செயலகத்தின் முன்பாக கறுப்புப் பட்டி போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாளை மறுதினம் சனிக்கிழமை 69 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், காணாமல் போனவர்கள் விடயத்திற்கு பதில் கூற வேண்டும், தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் விடுவிக்கப்பட வேண்டும், மீளக் காணிகள் சுவீகரிக்கப்படக் கூடாது, இனப்படுகொலைக்கு நீதி, சர்வதேச விசாரணை போன்ற கோரிக்கைகளை முன்வைத்து காலை 8 மணிமுதல் 10 மணிவரை அமைதியான போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதென அவர் தெரிவித்தார்.