வவுனியாவில் கணவனின் தாக்குதலில் மனைவி படுகாயமடைந்த நிலையில், வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


வவுனியா பழைய சுந்தரபுரம் பகுதியில் வசித்து வந்த நான்கு வயது பிள்ளையின் தாயின் மீது கணவன் மறைந்திருந்து கத்தியால்  தாக்கியதில் படுகாயமடைந்த நிலையலில் மனைவி வவுனியா  பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மனைவி தனது கணவனுடன் முரண்பட்டிருந்த நிலையில், நீதிமன்ற வழக்கில் மனைவிக்கு கணவனால் மாதாந்தம் உதவித் தொகை வழங்கப்பட்டு வந்துள்ளது.

மனைவி தனது தாய் தந்தையுடன் வசித்து வந்துள்ளார்.  எனினும் சில மாதமாக மனைவிக்கு செலுத்தவேண்டிய தொகையினை வழங்க தவறியுள்ளார்.

இதையடுத்து இருவருக்கும் இடையே  மோதல் ஏற்பட்டுள்ளது. நேற்று தனது மகனை பார்வையிடச் சென்றதுடன் மனைவியின் தந்தையிடம் தன் மனைவியை தாக்குவேன் என தெரிவித்து விட்டு சென்றுள்ளார். இதையடுத்து இன்று காலை கணவன் மறைந்திருந்து மனைவி மீது கத்தியால் வெட்டியதில் தலையில் படுகாயமடைந்த நிலையில் அவர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தினையடுத்து மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் கணவன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக  விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.