விக்ரம் பிரபு நடிக்கும் 'இறுகப் பற்று' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

01 Aug, 2023 | 03:09 PM
image

நடிகர் விக்ரம் பிரபு முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'இறுகப் பற்று' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

'போட்டா போட்டி', 'தெனாலிராமன்', 'எலி' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் யுவராஜ் தயாளன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'இறுகப் பற்று'. இதில் விக்ரம் பிரபு, விதார்த், ஸ்ரீ, ஸ்ரத்தா ராமா ஸ்ரீநாத், அபர்னதி, சானியா ஐயப்பன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். மூன்று காதல் ஜோடிகளை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் எஸ். ஆர். பிரபு, எஸ். ஆர். பிரகாஷ் பாபு, பி. கோபிநாத், ஆர். தங்க பிரபாகரன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து இறுதி கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதில் விக்ரம் பிரபு - ஸ்ரத்தா ராமா ஸ்ரீநாத், விதார்த் -அபர்னதி, ஸ்ரீ -சானியா ஐயப்பன் ஆகிய மூன்று ஜோடிகளின் கதாபாத்திரத் தோற்றம் விவரிக்கப்பட்டிருக்கிறது.

இந்த மூன்று ஜோடிகளுக்குள் ஏற்படும் நெருக்கடிகளும், அதனை அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களும் தான் படத்தின் கதையாக இருக்கும் என அவதானிக்கப்படுகிறது.

ஃபர்ஸ்ட் லுக்கில் கதை மாந்தர்களும், கதை சம்பவங்களும் சூசகமாக வெளியிடப்பட்டிருப்பதால் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்