மட்டக்களப்பு - ஏறாவூர், காட்டுப்பள்ளி பகுதியில் வீடொன்றின் சுவர் இடிந்து விழுந்ததில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் 52 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக ஏறாவூர்  வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.