இறுதி 2 விக்கெட்களை ஸ்டுவட் ப்றோட் கைப்பற்ற ஆஸியை 49 ஓட்டங்களால் வென்றது இங்கிலாந்து - தொடர் 2 - 2 என சமன் ; வெற்றியுடன் விடைபெற்றார் ப்றோட்

01 Aug, 2023 | 11:07 AM
image

(நெவில் அன்தனி)

லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற 5ஆவதும் கடைசியுமான டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியாவின் கடைசி 2 விக்கெட்களை ஸ்டுவட்  ப்றோட்   கைப்பற்ற, 49 ஓட்டங்களால் இங்கிலாந்து வெற்றிபெற்று தொடரை 2 - 2 என சமப்படுத்தியது.

ஆனால், ஆஷஸ் ஜாடியை அவுஸ்திரேலியா தக்கவைத்துக்கொண்டது.

இப் போட்டியில் ஈட்டிய வெற்றியுடன் ஸ்டுவட் ப்றோட் தொழில்முறை கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார்.

ஆஷஸ் தொடர் வரலாற்றில் இங்கிலாந்து சார்பாக அதிக விக்கெட்களை வீழ்த்தியுள்ள ஸ்டுவட் ப்றோட், டெஸ்ட் கிரிக்கெட்டில் 604 விக்கெட்களுடன் விடைபெற்றார்.

டொட் மேர்பி, அலெக்ஸ் கேரி ஆகிய இருவரும் ஸ்டுவட் ப்றோடின் பந்துவீச்சில் விக்கெட் காப்பாளர் ஜொனி பெயாஸ்டோவிடம் பிடிகொடுத்து கடைசியாக ஆட்டம் இழந்தனர்.

இந்தப் போட்டியில் இங்கிலாந்து வெற்றிபெற்றதை அடுத்த ஸ்டுவட் ப்றோடும் மொயீன் அலியும் கைகோர்த்தவாறு ஆடுகளம் விட்டு வெளியேறினர். 2ஆவது இன்னிங்ஸில் 3 விக்கெட்களைக் கைப்பற்றிய மொயீன் அலிக்கும் இது கடைசி டெஸ்டாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

இப் போட்டியில் 384 ஓட்டங்கள் என்ற எட்டிப்பிடிக்கக் கூடிய வெற்றி இலக்கை நோக்கி 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா சகல விக்கெட்களையும் இழந்து 334 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

போட்டியின் ஐந்தாம் நாளான திங்கட்கிழமை (31) காலை விக்கெட் இழப்பின்றி 135 ஓட்டங்களிலிருந்து 2ஆவது இன்னிங்ஸைத் தொடர்ந்த அவுஸ்திரேலியா வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், மொத்த எண்ணிக்கை 140 ஓட்டங்களாக இருந்தபோது டேவிட் வோர்னர் 60 ஓட்டங்களுடனும்  இரண்டு ஓவர்கள் கழித்து உஸ்மான் கவாஜா 72 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (141 - 2 விக்.)

மானுஸ் லபுஷான் 13 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தபோது மொத்த எண்ணிக்கை 169 ஓட்டங்களாக இருந்தது.

ஸ்டீவன் ஸ்மித், ட்ரவிஸ் ஹெட் ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 95 ஓட்டங்களைப் பகிர்ந்து அவுஸ்திரேலியாவுக்கு நம்பிக்கை ஊட்டினர்.

ட்ரவிஸ் ஹெட் 43 ஓட்டங்களுடனும் ஸ்டீவன் ஸ்மித் 54 ஓட்டங்களுடனும் 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழக்க அவுஸ்திரேலியா நெருக்கடியை எதிர்கொண்டது.

ஏனைய துடுப்பாட்ட வீரர்களில் அலெக்ஸ் கேரி 28 ஓட்டங்களையும் டொட் மேர்பி 18 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்களையும் மொயீன் அலி 3 விக்கெட்களையும் ஸ்டுவட் ப்றோட் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஜூலை 27ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமான இந்த டெஸ்ட் போட்டி கடைசி வரை சம அளவில் மோதிக்கொள்ளப்பட்ட வண்ணம் இருந்தது.

இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 283 ஓட்டங்ளைப் பெற்றதுடன் அவுஸ்திரேலியா 295 ஓட்டங்களைப் பெற்றது.

இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து 395 ஓட்டங்களைப் பெற 384 ஓட்டங்களைப் வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 334 ஓட்டங்களைப் பெற்றது.

எண்ணிக்கை சுருக்கம்

இங்கிலாந்து 1ஆவது இன்: 283 (ஹெரி புறூக் 85, பென் டக்கெட் 41, கிறிஸ் வோக்ஸ் 36, மொயீன் அலி 34, மிச்செல் ஸ்டார்க் 82 - 4 விக்., டொட் மேர்பி 22 - 2 விக்., ஜொஷ் ஹேஸ்ல்வூட் 54 - 2 விக்.)

அவுஸ்திரேலியா 1ஆவது இன்: 295 (ஸ்டீவன் ஸ்மித் 71, உஸ்மான் கவாஜா 47, பெட் கமின்ஸ் 36, டொட் மேர்பி 34, கிறிஸ் வோக்ஸ், 61 - 3 விக்., ஜோ ரூட் 20 - 2 விக்., ஸ்டுவட் ப்றோட் 49 - 2 விக்., மார்க் வூட் 62 - 2 விக்.)

இங்கிலாந்து 2ஆவது இன்: 395 (ஜோ ரூட் 91, ஜொனி பெயாஸ்டோவ் 78, ஸக் க்ரோவ்லி 73, பென் டக்கெட் 42, பென் ஸ்டோக்ஸ் 42, மிச்செல் ஸ்டார்க் 100 - 4 விக்., டொட் மேர்பி 110 - 4 விக்.)

(வெற்றி இலக்கு 384) அவுஸ்திரேலியா 2ஆவது இன்: 334 (உஸ்மான் கவாஜா 72, டேவிட் வோர்னர் 60, ஸ்டீவன் ஸ்மித் 54, ட்ரவிஸ் ஹெட் 43, கிறிஸ் வோக்ஸ் 50 - 4 விக்., மொயீன் அலி 76 - 3 விக்., ஸ்டுவட் ப்றோட் 62 - 2 விக்.)

ஆட்டநாயகன்: கிறிஸ் ப்றோட், தொடர்நாயகர்கள்: கிறிஸ் வோக்ஸ் (இங்கிலாந்து), மிச்செல் ஸ்டார்க் (அவுஸ்திரேலியா)

இந்தத் தொடர் முடிவில் இரண்டு அணிகளும் தலா 24 ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிகளைப் பெற்றுள்ளன. அத்துடன் 2 அணிகளும் மந்த கதியில் ஓவர்கள் வீசியதற்காக தலா 2 எதிர்மறை புள்ளிகள் 2 அணிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆஸி.யை மீண்டும் வீழ்த்தி தொடரை முழுமையாக...

2025-02-14 00:18:39
news-image

ஐசிசி ஒழுக்க விதிகளை மீறிய பாகிஸ்தானியர்...

2025-02-13 19:28:02
news-image

கில் அபார சதம், கொஹ்லி, ஐயர்...

2025-02-13 18:17:21
news-image

ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண சிறப்பு தூதுவர்களாக...

2025-02-13 17:23:02
news-image

மாலைதீவில் கராத்தே பயிற்சி மற்றும் தேர்வு

2025-02-13 10:26:53
news-image

சுவிட்சர்லாந்தில் கராத்தே பயிற்சி பாசறை

2025-02-13 10:43:37
news-image

சரித் அசலன்க சதம் குவித்து அசத்தல்;...

2025-02-12 18:57:16
news-image

இலங்கையுடனான டெஸ்ட் தொடருக்குப் பின்னர் குனேமானின்...

2025-02-12 12:02:33
news-image

உலகக் கிண்ணத்துக்கு சிறந்த அணியை கட்டியெழுப்புவதை...

2025-02-11 19:22:29
news-image

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை...

2025-02-11 09:21:46
news-image

ரோஹித் ஷர்மா 32ஆவது ஒருநாள் சதம்...

2025-02-10 12:42:11
news-image

இரண்டாவது டெஸ்டில் இலங்கையை 9 விக்கெட்களால்...

2025-02-09 16:26:20