கொழும்பு - புறக்கோட்டை, ஒல்கோட் மாவத்தையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக  போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஓய்வூதியம் பெறும் விசேட தேவையுடைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக குறித்த வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் வாகன சாரதிகள் மாற்றுவீதிகளை பயன்படுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.