அரசாங்கத்தின் அஸ்வெசும நிவாரணத்திட்டத்துக்கு ஐந்நூறு ரூபாய் வைப்பீடு செய்து வங்கிக்கணக்கொன்றை ஆரம்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருப்பதால்,இத்திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டுள்ள பெருந்தோட்டப்பகுதி மக்கள் இரவிரவாக அரச வங்கிகளின் முன்பாக காத்திருக்கும் அவலம் தொடர்கின்றது.
மக்கள் வங்கி, இலங்கை வங்கி, தேசிய சேமிப்பு வங்கி ஆகிய வங்கிகளில் கணக்கை ஆரம்பிக்க வேண்டும் என நிதி பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் ஊடாக பிரதேச செயலகங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் வேறு வங்கிகளில் கணக்கைக் கொண்டிருக்கக் கூடிய ஆயிரக்கணக்கானோர் மேற்படி வங்கிகளில் கணக்குகளை ஆரம்பிக்க சரியானதொரு பொறிமுறையை அரசாங்கம் வகுக்காத காரணத்தினால் இந்த மக்கள் முதல் நாள் இரவே தமக்கான டோக்கன்களை பெற்றுக்கொள்ள வங்கிகளுக்கு முன்பாக படுத்துறங்கி காலையில் டோக்கன்களைப் பெற்று வருகின்றனர்.
அட்டன் நகரை அண்டிய பிரதேசத்திலிருந்து இவ்வாறுநூற்றுக்கணக்கானோர் காலை வேளையில் வங்கிகளுக்கு முன்பாக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். நாள் ஒன்றுக்கு 75 தொடக்கம் 100 டோக்கன்களே வழங்கப்படுகின்றமையால் முதல் நாளே பலர் வந்து வங்கிகளுக்கு முன்பாகவும் நடை பாதைகளிலும் உறங்கும் அவல நிலைமை ஏற்பட்டுள்ளது.
அதே வேளை இந்த டோக்கன்களை பெற்றுக்கொடுக்க சில முச்சக்கர வண்டி சாரதிகள் ஆயிரம் ரூபாய் வசூலித்து வருவதாகவும் முறைப்பாடுகள் எழுந்துள்ளன. இந்த நிவாரணத்தைப் பெறுவதற்கு இவ்வாறு மக்களை அலைகழிக்க வைக்க வேண்டுமா என நகர வர்த்தகர்களும் பிரதேச மக்களும் பெரும் விசனத்தை தெரிவிக்கின்றனர்.
குறித்த நிவாரணங்களைப் பெற தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு வங்கிக் கணக்கை ஆரம்பிக்கபிரதேச செயலகமானது ஏதாவதொரு பொறிமுறையை ஏற்படுத்த வேண்டும் என பயனாளிகளும் பிரதேச மக்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும் இவ்வாறு மக்கள் ஒவ்வொரு நாளும் வங்கிகளுக்கு முன்பதாக நீண்ட வரிசையில் நிற்பது குறித்து மாவட்ட அரசியல்வாதிகளிடமும் அவர்களின் உதவியாளர்களிடமும் தெரிவித்தும் எந்த பயனும் ஏற்படவில்லையென்றும் தெரிவிக்கப்படுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM