மட்டுநகரிலும் சமஷ்டியை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம்

Published By: Vishnu

31 Jul, 2023 | 09:40 PM
image

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட நிரந்தர அரசியற் தீர்வை நோக்கிய 100 நாட்கள் செயல்முனைவின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவினால் முன்வைக்கப்பட்ட சமஸ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை உறுதி செய்யக் கோரி திங்கட்கிழமை (31) வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் அனைத்து மாவட்டங்களிலும் கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.  

அதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் திங்கட் கிழமை (31) காலை காந்திப் பூங்காவில் குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் மட்டக்களப்பு இணைப்பாளர் ஜெ.கோபிநாத் தலைமையில் இடம்பெற்றது. 

இக்கவனயீர்ப்பு போராட்டத்தில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதான இணைப்பாளர் க.லவகுசராசா உட்பட சிவில் செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது வடக்கு கிழக்கு இணைந்த சமஸ்டி தீர்வினைக் கோருகின்ற வகையிலான கோசங்கள் முன்வைக்கப்பட்டு, பதாதைகளை ஏந்தியவண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் இறுதியில் 100 நாட்கள் செயல்முனைவில் மக்களினால் முன்வைக்கப்பட்ட 16 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மக்கள் பிரகடனமும் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுமார் 300 கிலோ போதைப்பொருட்களுடன் 6...

2025-11-12 10:41:04
news-image

சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட பீடி இலைகளுடன்...

2025-11-12 10:22:56
news-image

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கைது!

2025-11-12 09:59:37
news-image

பெருந்தோட்ட மக்களுக்கான தீர்வுகளை மலினப்படுத்தும் எதிர்க்கட்சியின்...

2025-11-12 10:00:34
news-image

வளமான நாடு அழகான வாழ்க்கையை ஏற்படுத்துவதற்கு...

2025-11-12 09:38:17
news-image

குடும்ப நல சுகாதார சேவையில் எழுந்துள்ள...

2025-11-12 09:37:06
news-image

தமிழ் மக்களுக்கு அரசியல் நோக்கமின்றி அபிவிருத்தி...

2025-11-12 09:26:45
news-image

சுற்றுலா செல்லும் போது சமூக வலைதளங்களில்...

2025-11-12 09:25:43
news-image

அடுத்த வருடம் சுகாதார துறையில் பாரிய...

2025-11-12 09:23:49
news-image

இன்றைய வானிலை

2025-11-12 06:42:43
news-image

விதாதா வேலைத்திட்டத்தை அமுல்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்

2025-11-11 16:48:02
news-image

கிவுல் ஓயாத் நீர்த்தேக்க திட்டத்திற்கான நிதி...

2025-11-11 16:45:18