உணவுப் பாதுகாப்புமிக்க இலங்கையை நோக்கி

31 Jul, 2023 | 01:03 PM
image

நாட்டில் விவசாய - உணவுத் துறையின் நிலைபேறானதன்மை மற்றும் மீள்தன்மையை மேம்படுத்துவதற்கான உடனடி நடவடிக்கைகளின் அவசியத்தை FAO ஸ்ரீ லங்கா வலியுறுத்துகிறது.

அறிமுகம்: இலங்கை அதன் மக்கள் தொகைக்கான உணவு உற்பத்தி, அணுகல் மற்றும் பயன்பாடு ஆகியவற்றை பாதிக்கும் தனித்துவமான சவால்களை எதிர்கொள்கிறது. காலநிலை மாற்றம், விநியோகச் சங்கிலி சிக்கல்கள், பொருளாதார ஏற்ற இறக்கங்கள் மற்றும் கொவிட்-19 தொற்றுநோய் போன்ற காரணிகள் இந்த சவால்களை மேலும் மோசமாக்கின. 

இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) பிரதிநிதியான திரு. விம்லேந்திர ஷரன்,[publication] உடன் நடாத்திய உரையாடலில், இலங்கையின் தற்போதைய உணவுப் பாதுகாப்பின் நிலை குறித்த தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். 

கேள்வி : கடந்த சில மாதங்களாக இலங்கையின் பயிர் மற்றும் உணவுப் பாதுகாப்பு நிலை தொடர்பான முரண்பாடான கூற்றுக்களை நாம் அவதானிக்கிறோம். நாட்டின் நிலைமை குறித்த FAO இன் மதிப்பீடு என்ன?

பதில் : இரண்டு மொழி வழக்குகளை ஒன்றாக இணைத்துக் கூற என்னை அனுமதியுங்கள் - “சுரங்கப்பாதையின் முடிவில் வெளிச்சம் உள்ளது, ஆனால் நாங்கள் இன்னும் காடுகளை விட்டு வெளியேறவில்லை."

2022 மே மாதத்தில், FAO உலக உணவுத் திட்டத்துடன் (WFP) இணைந்து அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இலங்கையில் முதலாவது பயிர் மற்றும் உணவுப் பாதுகாப்பு மதிப்பீட்டுத் திட்டத்தை (CFSAM) மேற்கொண்டது. இரண்டு தொடர்ச்சியான பருவங்களது மோசமான அறுவடைகளானவை உற்பத்தியில் 50மூ வீழ்ச்சிக்கு வழிவகுத்ததுடன் அந்நியச் செலாவணிக் கட்டுப்பாடுகள் காரணமாக உணவு தானியங்களின் இறக்குமதியைக் குறைத்தது என்றும் மதிப்பீட்டின் கண்டறிதல்கள் வெளிப்படுத்தின. 2022 ஆம் ஆண்டில் முக்கிய தானியமான நெல் உற்பத்தியானது, பசளைகள் குறைவாக வழங்கப்பட்டதைத் தொடர்ந்து குறைவடைந்த விளைச்சல் காரணமாக கிட்டத்தட்ட 40மூ இனால் வீழ்ச்சியடைந்துள்ளது.     

ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் முக்கிய அபிவிருத்தி பங்காளர்களின் அவசர உதவியால் ஆதரிக்கப்படும் அரசாங்கத்தின் ஒருங்கிணைந்த முயற்சி ஒரு நிலையான மீட்புக்கு வழிவகுத்தது. குயுழுஇ முக்கிய பங்காளிகளாகிய ருளுயுஐனு, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜப்பானின் முக்கிய நிதி ஆதரவுடன் ஒன்பது மாத காலப்பகுதியில் 58,700 மெட்ரிக் தொன் அத்தியாவசிய பசளைகளை இலங்கையில் உள்ள அனைத்து நெல் விவசாயிகளையும் சென்றடையும் வகையில் வெற்றிகரமாக விநியோகித்தது. இந்த நடவடிக்கைகளின் தாக்கத்தினால், 2023 சிறுபோக நெல் பருவ விதைப்பு ஏறத்தாழ 500,000 ஹெக்டெயரை எட்டியுள்ளது. இது 2023 யூன் மாத நிலவரப்படி இலக்காகக் கொள்ளப்பட்ட 541,134 ஹெக்டெயரில் 92மூ ஆகும். இந்த புள்ளிவிபரங்களின் அடிப்படையில், முன்னறிவிக்கப்பட்ட நெல் உற்பத்தி 2.18 மில்லியன் மெட்ரிக் தொன்களாக உள்ளது, இது நெருக்கடிக்கு முந்தைய சிறுபோகத்தின் சராசரி உற்பத்தி அளவான 2 மில்லியன் மெட்ரிக் தொன்களை விட அதிகமானதாகும்.

அனைத்து மாகாணங்களிலும் உணவுப் பாதுகாப்பு மேம்பட்டுள்ளது, சனத்தொகையில் சுமார் 17மூ அல்லது 3.9 மில்லியன் மக்கள் மிதமான கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்கின்றனர். இது முந்தைய ஆண்டை விட 40மூ குறைவாகும். இருப்பினும், அதே காலகட்டத்தில் வறுமையின் அளவு இரு மடங்காக அதிகரித்துள்ள நிலையில், உணவுக்கான அணுகல் மிகவும் தீவிரமான பிரச்சினையாக உள்ளது.

இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான பாதையில் நாடு இருக்கும் அதே வேளையில், நிலையான உற்பத்தி மற்றும் விவசாயத் துறை எதிர்கால அதிர்ச்சிகளைத் தாங்கக் கூடியது என்பதை உறுதிப்படுத்த இலங்கையின் விவசாய உணவு முறைமையில் பின்னடைவைக் கட்டியெழுப்புவதற்கான உடனடித் தேவை உள்ளது. 

கேள்வி : விவசாய மற்றும் பொருளாதார நெருக்கடியின்போது இலங்கைக்கு ஆதரவு வழங்கியதில் (FAO) இன் பங்களிப்பு பற்றி குறிப்பிட முடியுமா?

பதில்: எமது பங்காளிகளின் தாராளமான ஆதரவுடன், இலங்கையின் விவசாயம் மற்றும் மீன்பிடித் துறைகள் மற்றும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட வாழ்வாதாரங்களுக்கு உதவ குயுழு ஒரு விரிவான அணுகுமுறையை நடைமுறைப்படுத்தியது.

சிறு விவசாயிகளுக்கும், சிறிய அளவில் தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கும் வாழ்வாதாரத்திற்கான உடனடித் தேவையான பண உதவி மற்றும் உரம் போன்ற அத்தியாவசிய உள்ளீடுகள் வழங்கப்பட்டன. போசாக்குள்ள பொருட்களுக்கான நிலையான அணுகலை அதிகரிக்க நகர்ப்புற தோட்டச்செய்கைக்கு ஆதரவளிப்பதனூடாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவினோம். 

கடந்த ஒரு வருடத்தில், பாதிக்கப்படக்கூடிய விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு உதவ (FAO ) ஸ்ரீ லங்கா 55.68 மில்லியன் டொலர் மதிப்பிலான தலையீட்டுடன் பதிலளித்துள்ளது. எங்களின் இருதரப்பு மற்றும் பலதரப்பு பங்காளிகளான USAID, EU, FCDO, DFAT, ஜப்பான், கனடா, நியூசிலாந்து, ஸ்வீடன் மற்றும் ஏனைய தரப்புகளால் நிதியளிக்கப்பட்ட இந்தத் தலையீடுகள், உரம் மற்றும் நேரடி பணப் பரிமாற்றங்கள் உட்பட தேவையான விவசாய உள்ளீடுகளை வழங்க (FAO) இற்கு உதவியுள்ளன.

இருப்பினும், எதிர்வரும் ஆண்டுகளில் உள்ளூர் விவசாயம் மற்றும் மீன்பிடித் துறைகளின் பின்னடைவு மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்த இன்னும் நிறைய வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது. மேலும் (FAO)  ஒரு துடிப்பான மற்றும் நிலையான விவசாயத் துறையை நோக்கி ஒரு பயனுள்ள நிலைமாற்றத் திட்டத்தை வடிவமைப்பதில் அரசாங்கத்துடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றி வருகிறது. 

கேள்வி : உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த குயுழு வேறு என்ன நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது?

பதில் : இலங்கையின் விவசாய உணவு முறையின் நீண்ட கால நிலைபேற்றுத் தன்மைக்கு மீள்தன்மை மற்றும் வளர்ச்சியை உருவாக்குவது மிகவும் முக்கியமானது. வறட்சி மற்றும் வெள்ளம் போன்ற தீவிர வானிலை நிகழ்வுகள் உட்பட குறிப்பிடத்தக்க சவால்களை காலநிலை மாற்றம் தோற்றுவித்துள்ளது. இந்த பாதிப்புகளைத் தணிக்க, காலநிலை-திறன் விவசாய நடைமுறைகளில் முதலீடுகள் அவசியம். ;.( FAO) ,  ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவுடன், ஏற்கனவே 70,000 நெல் விவசாயிகளுடன் பணியாற்றுகிறது. இதன் மூலம் ஒருங்கிணைந்த தாவர ஊட்டச்சத்து முகாமைத்துவப் (IPNM) பொறிமுறையில் வளங்களைப் பயன்படுத்தும் திறன் மற்றும் மண்ணின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

‘பாதுகாப்பற்றவை உணவு அல்ல’ என்று FAO உறுதியாக நம்புகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) நிதியுதவியுடன் கூடிய BESPA-FOOD  (விவசாய உணவுத் துறைக்கான சிறந்த தரநிலைப்படுத்தப்பட்ட நடைமுறைகள்) திட்டத்தின் மூலம் பாதுகாப்பான உணவு மக்களைச் சென்றடைவதற்கு செயல்படுத்த, நாட்டில் நன்கு ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு அமைப்பை நிறுவுவதற்கு FAO  அரசாங்கத்தை ஆதரிக்கிறது. தற்போதுள்ள உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை மறுவடிவமைக்க நாங்கள் சுகாதார அமைச்சுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். இந்த இடைவெளிகளை நிவர்த்தி செய்ய, இலங்கையின் முதல் உணவு பாதுகாப்பு கொள்கையை உருவாக்கி உணவு சட்டத்தை மேம்படுத்தி வருகிறோம். அனைத்து பங்குதாரர்களுக்கும் குறிப்பாக நுகர்வோருக்கும் பயனளிக்கும் வகையில் பாதுகாப்பான உணவு நடைமுறைகள் குறித்து மிகவும் ஒருங்கிணைந்த மற்றும் வலுவான உரையாடலை எளிதாக்குவதே எங்கள் நோக்கமாகும். இந்த திட்டம் UNIDO  உடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது. 

சுற்றாடல் அமைச்சுடன் இணைந்து, இலங்கையின் மூன்று ஆற்றுப் படுகைகளில் சமூகம் மற்றும் சுற்றுச்சூழல் முறைமை ஆரோக்கியத்தை வலுப்படுத்த, நிலையான, மீளுருவாக்கம் மற்றும் தாங்குதிறன் கொண்ட அரிசி அடிப்படையிலான உணவு முறைமையில் பணியாற்றுவதற்காக 5.33 மில்லியன் டொலர் GEF நிதியுதவியுடன் கூடிய திட்டத்தை நாங்கள் வகுத்துள்ளோம்.

மீன்பிடித் துறையில், நோர்வே மற்றும் கொரிய குடியரசின் உதவியுடனும் மீன்வள அமைச்சின் நெருக்கமான ஒத்துழைப்புடனும், இறால் உயிரி பாதுகாப்பிற்கான தேசிய கண்காணிப்பு தளத்தை நிறுவுவதில் நாங்கள் பணியாற்றி வரும் அதே நேரத்தில் இலங்கையில் மீன் இழப்பு மற்றும் கழிவுகளை குறைப்பதற்கான திறன் மற்றும் வழிகளையும் மேம்படுத்துகிறோம். மன்னாரில் உள்ள கடலட்டை குஞ்சு பொரிப்பகத்தின் திறனை மேம்படுத்துவதில் ஒரு சுவாரஸ்யமான திட்டம் நடைபெற்று வருகிறது. அங்கு தேவையான உட்கட்டமைப்பு மற்றும் ஆய்வக உபகரணங்களுக்கு உதவுவதுடன், இலங்கையில் முதல் முறையாக கடலட்டைக்கான IVF ஐ அறிமுகப்படுத்த FAO  உதவுகின்றது. 

இவையே எமது சிறப்பம்சங்களாகும். இன்னும் பல திட்டங்கள் உள்ளன, மேலதிக விபரங்களுக்கு எங்கள் இணையத்தளத்தைப் பார்வையிடுமாறும் சமூக ஊடகங்களில் எங்களைப் பின்தொடருமாறும் உங்கள் பத்திரிகையின் வாசகர்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்.

கேள்வி : இலங்கையின் உணவுப் பாதுகாப்புத் துறையின் நிலைபேறான தன்மை மற்றும் மீள்தன்மையைப் பாதுகாப்பதற்கு, இலங்கையில் நீங்கள் என்ன முன்னுரிமைகளை அடையாளம் கண்டுள்ளீர்கள்?

பதில்: பல விடயங்கள் உள்ளன. நான் எல்லாவற்றையும் குறிப்பிடவில்லை என்றாலும், உங்கள் வாசகர்களுக்கு எங்களது எதிர்கால திட்டங்கள் குறித்து விபரிக்கிறேன்.  

இலங்கையில் விவசாய உணவு முறையை வலுப்படுத்துவதும் எதிர்கால சவால்களை தாங்கும் திறனை மேம்படுத்துவதும் அவசரத் தேவையாகும். இதற்கு உடனடி நடவடிக்கை தேவை. குயுழு இந்த கட்டாயத்தை அங்கீகரித்து, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த அறுவடை நடைமுறைகள் மற்றும் கொள்கைகளை நோக்கி துறையை மாற்றமுறச் செய்வதில் அரசாங்கத்திற்கு தீவிரமாக உதவி வருகிறது.

FAOக்கு அடையாளம் காணப்பட்ட சில முன்னுரிமைகளில் நெல் மற்றும் மக்காச்சோள சுற்றுச்சூழல் அமைப்புகளை புத்துயிர் அளிப்பது, அவற்றின் நெகிழ்ச்சி மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதும் அடங்கும். தற்போது நெல் விளையும் நான்கு மாவட்டங்களில் பயனுறுதி குறைந்த நெல் நிலங்களை ஏனைய வயல் பயிர்களுக்குப் பன்முகப்படுத்தும் திட்டத்தை வடிவமைத்து வருகிறோம், அதே நேரத்தில் அந்த மாவட்டங்களில் நெல் உற்பத்தியை அடுத்த மூன்று ஆண்டுகளில் 5மூ அதிகரித்து விளைச்சல் இடைவெளியை படிப்படியாகக் குறைக்கிறோம். முழு பெறுமதிச் சங்கிலியையும் வலுப்படுத்துவதில் பணியாற்றுவதோடு, தொடர்பயிர்முறை மற்றும் ஊடுபயிர் உள்ளிட்ட பாதுகாப்பு விவசாய நடைமுறைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் மக்காச்சோள சுற்றுச்சூழல் அமைப்பை புத்துயிர் பெறச் செய்வதற்கான திட்டத்தை நாங்கள் வடிவமைத்து வருகிறோம். 

தட்பவெட்ப நிலைகளுக்கு தாக்குப்பிடிக்கும் மீன்வளத்தை ஊக்குவிக்க, நோர்வே நிதியுதவி திட்டங்களில் ஒன்றின் கீழ், பசுமை காலநிலை நிதியத்திற்கு சமர்ப்பிப்பதற்கான 20 மில்லியன் டொலர் திட்டத்தை நிறைவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளோம். 

இலங்கைக்கான 15 மில்லியன் யூரோ மானியத்தின் கீழ் உணவு இழப்பு மற்றும் கழிவுகளை குறைக்க, FAO , வேறு சில நிறுவனங்களுடன் இணைந்து நாட்டின் உணவுத் துறையில் வட்டப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தை உருவாக்கி வருகிறது. இது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்துடன் மானிய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்துள்ளது.

FAO  ஆனது, காலநிலை மாற்ற பாதிப்புகளை நிவர்த்தி செய்வது மட்டுமல்லாமல், மீள்தன்மையுடைய விவசாயத் துறையின் நிலையான மற்றும் பசுமையான அபிவிருத்தியை மேம்படுத்த புத்தாக்கம் மற்றும் பல்வகைப்படுத்தலை ஊக்குவிப்பதுடன், இத்துறையின் முழுமையான வளர்ச்சியை செயல்படுத்துவதற்கான உணவு முறைமை அணுகுமுறையில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. முன்னோக்கிய பயணம் எவ்வளவு கடினமானதாக இருந்தாலும், இந்த நோக்கத்தில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right