குழந்தைகளுக்கான பாதுகாப்பான உலகத்தை உருவாக்குவோம்

31 Jul, 2023 | 01:03 PM
image

Ms. Shyamalee Pathirage தாய் மற்றும் குழந்தை சுகாதார நிபுணர்

வீடுகளில் விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குவது பெற்றோரின் பொறுப்பாகும். வீட்டிலும் வெளியிலும் உள்ள சூழல் சிறு குழந்தைகளின் உயிருக்கு கூட ஆபத்தை ஏற்படுத்தலாம். வீட்டின் தரை, சுவர்கள், கூரை மற்றும் குழந்தையைச் சுற்றியுள்ள தளபாடங்கள், மின்சார உபகரணங்கள் போன்றவை தொடர்பில் விசேட அவதானம் அவசியமாகும்.

குழந்தை ஓடுவதற்கும் நடப்பதற்கும் வசதியாக, வீட்டின் தரையை வழுக்காத வகையிலும், நீர் தேங்கி நிற்காத வகையிலும் பேண வேண்டும். குழந்தைகளுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட கம்பளம் அல்லது வழக்கமான கார்பெட்டை இடுவதன் மூலம் விபத்துகளைத் தடுக்க முடியும்.

குழந்தை பெரும்பாலான வேளைகளில் வீட்டின் தரையிலேயே இருப்பதால், வீட்டின் ஏனைய பகுதிகளை சுத்தம் செய்ய பயன்படுத்தாத துணி மூலம், சவர்க்காரம் மற்றும் நீரை மட்டும் பயன்படுத்தி தரையை சுத்தம் செய்த பின் மீண்டும் சாதாரண நீரினால் தரையை சுத்தம் செய்ய வேண்டும்.

கர்ப்பிணித் தாய் அல்லது சிறு குழந்தை இருக்கும் வீட்டின் மேற்கூரை அஸ்பெஸ்டோஸ் கூரையாக இருக்கக்கூடாது. ஏனெனில் சூரிய ஒளிக்கு வெளிப்பட்டு காணப்படுகின்ற அக்கூரைகளிலிருந்து வீட்டிற்குள் விழும் தூசிகள் குழந்தை மீதும் வீழ்ந்து, நாட்பட்ட புற்றுநோய் மற்றும் ஏனைய நோய்களை ஏற்படுத்தலாம். மேற்பாவுகை (உட்கூரை) இல்லாத அஸ்பெஸ்டோஸ் கூரையாக இருந்தால், அக்கூரையின் கீழே துணியால் மூடுவது பாதுகாப்பானதாக அமையும். சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும் கூரையில் உள்ள சிலந்தி வலைகளை அகற்றி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கடுமையான வண்ணங்களாக அல்லாமல் குழந்தைகளுக்கு ஏற்ற வண்ணப்பூச்சு மூலம் சுவர்களுக்கு நிறமூட்டுவது விரும்பத்தக்கது.

குழந்தையின் முதலுதவிப் பெட்டி, பொம்மைகள், உடையக்கூடிய காயமேற்படுத்தக் கூடிய பீங்கான் பொருட்கள், மருந்துகள், மண்ணெண்ணெய், இரசாயனப் பொருட்கள், உரம் போன்றவற்றை குழந்தைகளின் கைகளுக்கு எட்டாத வகையில், அலுமாரிகளுக்கு மேல் கவனமாக வைக்கலாம். குளியலறையை சுத்தமாகவும் நேர்த்தியாகவும் வைப்பதோடு, ஷாம்புகள் உள்ளிட்ட ஏனைய திரவங்களை குழந்தைக்கு எட்டாத வகையில் வைக்க வேண்டும்.

வீட்டுக்கு அருகிலுள்ள சூழலில் நீர்த் தொட்டிகள், நீர்க் குழிகள், சிறிய குளங்கள் இருந்தால், குழந்தை விடயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். விதைகள் அல்லது கையில் அகப்படும் ஏனைய பொருட்களை வாயினுள் போட குழந்தை ஆசைப்படுவதால், குழந்தை மீது கவனம் செலுத்தப்பட வேண்டும்.

சிறு குழந்தைகளுக்கு ஆராய்வதில் ஆர்வம் இருப்பதால், உயரமான இடங்களில் ஏறும் போதும், ஆபத்தான பொருட்களைத் தொடும் போதும், நீரில் விளையாடும் போதும் குழந்தை மீது கண் வைத்தவாறு இருக்க வேண்டும். பூனைகள் மற்றும் நாய்கள் மூலமான கீறல்கள், கடித்தல் மற்றும் கிருமிகளிலிருந்து குழந்தையை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். அத்துடன், மனநலக் குறைபாடுகள் கொண்டவர்களிடமிருந்து குழந்தையை முடிந்தவரை பாதுகாப்பதை பெற்றோர் உறுதி செய்ய வேண்டும்.

வீட்டிலுள்ளவர்களின் மேற்பார்வை மற்றும் கவனிப்புடன், வீட்டிற்குள்ளேயே குழந்தைக்கு பாதுகாப்பான உலகத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரெடிஸன் ஹோட்டல் கொழும்பில் பொம்பே நைட்ஸ்...

2024-02-21 16:36:47
news-image

டிஜிட்டல்‌ மயமாக்கத்துடன்‌ வாடிக்கையாளர்‌ சேவையை மேம்படுத்த...

2024-02-21 09:41:04
news-image

அகில இலங்கை மும்மொழி கட்டுரைப் போட்டி...

2024-02-20 14:58:28
news-image

மக்கள் வங்கியின YouTube ஊக்குவிப்பு சீட்டிழுப்பின்...

2024-02-16 13:37:55
news-image

Fentons Limited, Hayleys Fentons Limited...

2024-02-15 21:19:41
news-image

20 டைவ்களை நிறைவுசெய்த ஜோன் கீல்ஸ்...

2024-02-15 21:20:51
news-image

தேசிய தர விருது விழாவில் இலங்கை...

2024-02-14 11:09:37
news-image

ஸ்ரீ லங்கா காப்புறுதி ஒரு புதிய...

2024-02-12 18:00:39
news-image

கிழக்கில் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கான எதிர்பார்ப்புடன்...

2024-02-11 21:36:52
news-image

பயன்படுத்திய வாகனங்கள் மீதான VAT வரி ...

2024-02-07 21:11:18
news-image

சம்பத் வங்கியின் முயற்சியுடன் வவுனியா கிடாச்சூரி...

2024-02-07 20:56:00
news-image

முடி அகற்றுவதில் புரட்சிகர உயர் அம்சங்களுடன் ...

2024-02-07 20:55:00