யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சுதுமலை அம்மன் கோவில், பிள்ளையார் கோவில் மற்றும் வைரவர் கோவில் என நான்கு கோவில்களில் உண்டியல் உடைத்து பணம் திருடிய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உண்டியல் உடைத்து திருடப்பட்ட ஆலயங்களில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கமராக்களில் பதிவான காட்சிகளின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்த மானிப்பாய் பொலிஸார், சந்தேக நபரை அடையாளம் கண்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை (30) யாழ்.நகர் பகுதியில் வைத்து சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
கொழும்புத்துறை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து ஒரு தொகை உண்டியல் பணத்தை மீட்டுள்ளதாகவும், குறித்த நபர் யாழ். நகர் பகுதியில் உள்ள ஆலய உண்டியல்களை உடைத்து திருடிய குற்றத்தில் நீதிமன்றினால் 03 மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, அண்மையில் தான் சிறையில் இருந்து விடுதலையாகி இருந்தார் என பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM