புத்தளம் - குருணாகல் வீதியின் மூன்றாம் கட்டைப் பகுதியில் காட்டினுல் வயோதிபர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (30) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த காட்டுப் பகுதியில் விறகு வெட்டச் சென்ற ஒருவர் சடலமொன்று காணப்படுவதை அவதானித்த நிலையில் 119 தொலைப்பேசி அழைப்பு மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.
இவ்வாறு 119 அழைப்பிற்கையமைய புத்தளம் பொலிஸார் மற்றும் தடவியல் பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தைப் பார்வையிட்டனர்.
பின்னர் குறித்த சம்பவ இடத்திற்கு பதில் கடமையாற்றும் நீதவான் இந்திக்க தென்னகோன் வருகைத் தந்து சடலத்தைப் பார்வையிட்டார்.
பின்னர் குறித்த சடலத்தை வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்க உத்தரவிட்டுள்ளார்.
புத்தளம் தம்பபன்னி வீதியைச் சேர்ந்த 67 வயதுடைய ஆணொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சடலம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மற்றும் தடவியல் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM