இலங்கை அரசியலில் பெண்களின் பங்கு அதிகரிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இன்று வியாழக்கிழமை கையெழுத்து வேட்டையொன்று முன்னெடுக்கப்படட்டுள்ளது.

மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் பெண்களின் பங்கு அரசியலில் அதிகரிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி நாடாளாவிய ரீதியில் பொது மக்கள் மத்தியில் வழிப்புணர்வு நடவடிக்கைகளும் கையெழுத்துப் போராட்டங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக யாழ்ப்பாணத்திலும் இன்றையதினம் பொது மக்களின் கையெழுத்துக்களைப் பெறும் நடவடிக்கைகள் முன்னெக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.