அதிகார பகிர்வை மேற்கொள்ள பொருத்தமான நேரம் இதுவல்ல ; சரத் பொன்சேகா

Published By: Digital Desk 3

29 Jul, 2023 | 02:45 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

சர்வ கட்சி மாநாட்டில் அதிகார பகிர்வு நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றது. நாட்டின் அனைத்து மக்களும் சம உரிமையுடன் வாழ வேண்டும். நாட்டில் சுமுகமான நிலை இருக்கும் போதே இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இதனை மேற்கொள்ள சரியான நேரம் இதுவல்ல என எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

வியாழக்கிழமை (28) பிற்பகல் அநுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்த போது  சர்வகட்சி மாநாடு மற்றும் அதிகார பகிர்வு தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

சர்வ கட்சி மாநாட்டில் அதிகார பகிர்வு தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. எவ்வாறு அதிகார பகிர்வை மேற்கொள்வது? அல்லது எந்த சந்தர்ப்பத்தில் அதை செயல்படுத்துவது என்பது தொடர்பில் சிந்தித்து, நிதானமாக செயல்பட வேண்டிய தருணத்தில் இருக்கிறோம். 

நாட்டின் அனைத்து மக்களும் சம உரிமையுடன் வாழ வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும். அதுவே எனது நிலைப்பாடாகும். நாட்டில் சுமுகமான நிலை இருக்கும் போதே இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்க படவேண்டும். 

நாட்டில் நெருக்கடி நிலை காணப்படும் போது இவ்வாறான பிரச்சினைகளை எடுத்துக் கொள்ளும் போது இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் தரப்பினர் பலர் உள்ளனர். அது அவர்களுக்கு சாதகமாக மாறி விடும். இதற்கு முன்னரும் இவ்வாறு இனவாத செயற்பாட்டை  கொண்டே சிலர் ஆட்சிக்கு வந்தனர். இதனை செய்வதற்கு சரியான நேரம் இதுவல்ல என நான் நினைக்கிறேன்.  இருப்பினும் அதற்கான நியாயம் வழங்கப்பட வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இங்கிரிய மாவட்ட வைத்தியசாலைக்கு அருகில் வாகன...

2025-03-27 09:21:52
news-image

88 வயதில் க.பொ.த. சாதாரணதர பரீட்சையில்...

2025-03-27 09:11:56
news-image

ஹங்குரன்கெத்த பிரதேச சபையின் உள்ளூராட்சி மன்றத்...

2025-03-27 09:00:03
news-image

காலனித்துவ ஆட்சி காலத்தில் இழைக்கப்பட்ட அநீதிகளிற்கு...

2025-03-27 07:43:23
news-image

இன்றைய வானிலை

2025-03-27 06:37:01
news-image

முல்லைத்தீவில் 239 கசிப்பு விற்பனையாளர்கள் :...

2025-03-27 07:33:00
news-image

விபத்தில் சிக்கிய குடும்பப்பெண் யாழ். போதனா...

2025-03-27 01:36:52
news-image

மொரட்டுவையில் ரயில்வே மேம்பாலம் இடிந்து விழுந்தது

2025-03-27 07:30:32
news-image

யாழ்.அனலைதீவில் கால்நடை வைத்திய நடமாடும் சேவை

2025-03-26 23:54:53
news-image

பொருட்களின் விலைகளையும் சேவை கட்டணத்தையும் குறைக்க...

2025-03-26 19:29:31
news-image

வேட்பு மனுக்கள் நிராகரிப்புக்கு எதிராக உயர்...

2025-03-26 19:28:47
news-image

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் செக்...

2025-03-26 19:28:01