கொழும்பு - மோதர, பன்சல வீதி பகுதியில் ஹெரோயின் வைத்திருந்த இளம் பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் (21 வயது) நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட பெண்ணிடமிருந்து  2.260 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த பெண்ணை இன்று மாளிகாகந்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.