தமிழர்களுக்காக சர்வதேசம் நேரடியாகத் தலையிடவேண்டும் - கொக்குத்தொடுவாய் போராட்டத்தில் ரவிகரன் வலியுறுத்து

Published By: Vishnu

28 Jul, 2023 | 05:41 PM
image

இலங்கை அரசின் தமிழர்கள் மீதான அடக்கு முறை மற்றும், இனஅழிப்புச் செயற்பாடுகளுக்கு எதிராக, நியாயமான தீர்வினை வழங்க சர்வதேசம் நேரடியாகத் தலையிடவேண்டும் என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைரசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் இடம்பெற்ற மாபெரும் கவனயீர்ப்புப் பேரணியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

சர்வதேச நியமத்தின் அடிப்படையில் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுகள் இடம்பெறவேண்டும் என்பதுடன், சர்வதேசக் கண்காணிப்பில் இந்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்பது எமது நிலைப்பாடாகவிருக்கின்றது.

இந் நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும், பொறுப்புக்கூறல் விடயத்திலே இலங்கை அரசிற்கு சர்வதேசம் அழுத்தங்களைப் பிரையோகிக்கவேண்டும், தமிழ் மக்களின் அபகரிக்கப்பட்டுள்ள காணிகள் விடுவிக்கப்படவேண்டும், அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து வடகிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவுகள் மாபெரும் கவனயீர்ப்பை நடாத்தியிருக்கின்றனர்.

இது தவிர குருந்தூர்மலை விவகாரத்தில் எமது சைவ வழிபாடுகளை மேற்கொள்ளலாமென நீதிமன்று கட்டளை பிறப்பித்தும், அக் கட்டளைகளுக்கு மாறாக சில இனவாத அரக்கர் கூட்டம் எம்மை வழிபாடுகளில் ஈடுபடாமல் தடுத்துக்கொண்டிருக்கின்றது.

இவ்வாறாக தமிழர்களின்மீது மாற்றான்தாய் மனப்பான்மையுடன் செயற்படும் இலங்கை அரசிற்கு எமது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இலங்கை அரசின் தமிழர்கள் மீதான அடக்கு முறை மற்றும், இனஅழிப்புச் செயற்பாடுகளுக்கு எதிராக நியாயமான தீர்வினை வழங்க சர்வதேசம் நேரடியாகத் தலையிடவேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன் - என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இழுவை மீன்பிடியை படிப்படியாக நிறுத்தலாம் ;...

2025-03-26 17:29:34
news-image

வவுணதீவில் மாடு திருடியபோது பொதுமக்களால் தாக்கப்பட்ட...

2025-03-26 17:42:04
news-image

4 உணவக உரிமையாளர்களுக்கும் எதிராக ரூபா...

2025-03-26 17:35:26
news-image

8 இலட்சம் ரூபா பெறுமதியான கோடாவுடன்...

2025-03-26 17:28:12
news-image

அமெரிக்க தூதுவர் ஜூலி சங் -...

2025-03-26 17:15:00
news-image

அஸ்வெசும பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை வழங்குவதில்...

2025-03-26 17:25:49
news-image

பிரிட்டனின் தடைகள் ஒருதலைப்பட்சமானவை - வெளிவிவகார...

2025-03-26 17:06:23
news-image

திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்க தலைவியாக...

2025-03-26 17:07:14
news-image

14 மாவட்டங்களுக்கு கடும் மின்னல் தாக்கம்...

2025-03-26 17:29:02
news-image

கல்கிஸ்ஸை, வெள்ளவத்தை, பாணந்துறை கடற்கரை பகுதிகளில்...

2025-03-26 16:56:05
news-image

வாழைச்சேனையில் 9 கிராம் 30 மில்லிகிராம்...

2025-03-26 17:25:24
news-image

தம்புத்தேகம குடிநீர் திட்டத்தின் பணிகள் மீள...

2025-03-26 16:51:57