சர்வதேச விசாரணை ஒன்றே கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு உரிய தீர்வை வழங்கும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்தார்.
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும் சர்வதேச நிபுணத்துவம் மற்றும், கண்காணிப்பை வலியுறுத்தியும் தண்ணிமுறிப்பு குருந்தூர்மலை விவகாரம் உள்ளிட்ட தமிழர் தாயகத்தில் இடம்பெறும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும் இன்று வெள்ளிக்கிழமை (28) முல்லைத்தீவில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
பல மனித உடல்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. மக்கள் 2009 யுத்தம் முடிவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள்.
அவர்கள் உயிருடன் பிடிக்கப்பட்டு பொலிஸ், இராணுவத்துடன் சரணடைந்த பின்னர் காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள்.
அவர்கள் எங்கு போனார்கள்? எங்கு அடைக்கப்பட்டார்கள்? எங்கு புதைக்கப்பட்டார்கள்? என்பது எதுவுமே இதுவரை தெரியாது.
எனவே உள்ளக விசாரணை என்பது சாத்தியப்படாத ஒன்று. உள்ளக விசாரணை அன்றி நிச்சயமாக சர்வதேச விசாரணையின் கீழ் இது விசாரிக்கப்படுமாக இருந்தால் தான் உண்மைகள் வெளிப்படும்.
அந்த உடல்கள் இருந்த அடையாளம், இருந்த வகை , புதைக்கப்பட்ட காலம் என்பன எங்களுக்கு சரியான பதில்களை கூறும் என்று எதிர்பார்க்கின்றோம்.
எனவே சர்வதேச விசாரணை ஒன்றே கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு உரிய தீர்வை வழங்கும் என மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM