சித்தர்களின் அருளைப் பெறுவதற்கான சூட்சுமங்கள்

Published By: Ponmalar

28 Jul, 2023 | 04:25 PM
image

எம்மில் பலரும் சுய ஒழுக்கம் என்பதற்கான விதிமுறையை சூழலுக்கு ஏற்றவாறு தளர்த்திக் கொண்டு, பாவங்களை அல்லது பாவ செயல்களை துணிந்து செயல்படுத்த தொடங்கி விட்டோம்.

அத்துடன் இதற்காக ஆலயங்களுக்குச் சென்று இறைவனுக்கு அபிஷேகம், அலங்காரம், பூஜை, புனஸ்காரம் போன்றவற்றை மேற்கொண்டால்... பாவ செயல்களின் வீரியம் குறைந்துவிடும் என்றும் நம்பிக்கை கொண்டிருக்கிறோம்.

இவர்களின் படையெடுப்பால் தொன்மையான ஆலயங்கள் பலவற்றில் நவீனம் என்ற பெயரிலும், பக்தர்களுக்கு வசதி என்ற பெயரிலும் ... ஆகம விதிகளுக்கு எதிரான பல சௌகரியங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, ஆலயத்தின் புனித தன்மையை குறைக்க தொடங்கி இருக்கிறார்கள்.

ஆனால் எம்முடைய சித்தர்கள் தங்களது தவ வலிமையால் ஜீவ சமாதி அடைவதுடன் அந்த இடத்தில் ஆலயத்தை அமைத்தனர். அந்த ஆலயம் மக்களின் வாழ்க்கைக்கான எளிய மற்றும் சூட்சுமமான தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டவை.

இத்தகைய ஆலயங்களுக்கு செல்லும்போது மக்களின் கர்ம வினைகள் குறைந்து, அவர்களின் அகக் கண்கள் திறக்கப்படுகிறது அல்லது அதற்கான வாய்ப்பு உருவாகிறது. இதனால்தான் இறைவனின் அருளைப் பெற வேண்டும் என நினைப்பவர்கள் சித்தர்கள் ஜீவசமாதி அடைந்த ஆலயங்களுக்கு செல்கிறார்கள்.

பழனி முருகன் ஆலயத்தில் போகரின் ஜீவ சமாதி அமைந்திருக்கிறது. இந்த ஆலயத்தில் முருக பெருமானின் அருள் அனைவருக்கும் கிடைத்துக் கொண்டிருக்கிறது.

மேலும் செவ்வாய் கிரகத்தின் தாக்கம் குறையும் படி இந்த ஆலயம் அமைக்கப்பட்டிருப்பதால், இங்கு வருகை தரும் பக்தர்களுக்கு செவ்வாய் தோஷத்தின் கடுமை குறைகிறது.

இதுபோன்று சித்தர்கள் ஜீவசமாதி அடைந்திருக்கும் இடங்களில் அவர்கள் அருவமாகவும், இந்த பேரண்டத்துடன் கலந்து ஒளி ரூபமாகவும் திகழ்பவர்கள்.

இவர்கள் தங்கி தவம் செய்த இடங்கள் தான் இன்று புகழ்பெற்ற ஆலயங்களாக உருவாகி இருக்கின்றன. இத்தகைய ஆலயங்களை கண்டறிந்து அங்கு சென்று வருவதால் எம்முடைய கர்ம வினைகள் குறைந்து, எமக்கு வரவிருந்த மாய தடைகள் விலகுகிறது.

சித்தர்கள் ஜீவசமாதியில் இருந்தபடியே அருள் செய்பவர்கள். மேலும் சில சித்தர்கள் சில நூறு ஆண்டுகளுக்கு முன்பாக ஜீவசமாதி அடைந்து அங்கேயே லிங்கமாக மாறி இருப்பர். இவர்கள் உரிய காலகட்டத்தில் சிலர் மூலமாக வெளிப்படுவர்.

இத்தகைய ஜீவசமாதிகள் எம்முடைய இல்லங்களுக்கு அருகே இருந்தால் தவறாது அங்கு பயணித்து வர வேண்டும். இதன் ஊடாக எம்முடைய எண்ணங்களில் மாற்றம் ஏற்படும். எதிர்மறையான எண்ணங்கள் அழிந்து நேர் நிலையான எண்ணங்கள் உருவாகும். இதனைத் தொடர்ந்து எம்முடைய பிரச்சனைகள் படிப்படியாக குறைந்து விடும்.

சித்தர்கள் - சாதாரண மனிதர்கள் தங்களது அருள் வாழ்வை உணர்ந்து கொள்வதற்காகவே பல ரகசியங்களை தெளிவுபடுத்தி விளக்கம் அளித்துள்ளனர்.

ஜீவசமாதிகளுக்கு தொடர்ந்து செல்வதன் மூலம் நாம் கண்மூடித்தனமாக பின்பற்றும் பல பழக்க வழக்கங்களின் நிஜ பின்னணியை நாமே உணர்ந்து கொண்டு, தெளிவடைந்து... எவை நல்லது என்பதனை தெரிந்து கொண்டு, அதனை உறுதியாக பின்பற்றி வாழ்க்கையில் முன்னேற தொடங்குவோம்.

ஜீவ சமாதிகளுக்கு தொடர்ந்து சென்று வருவதன் மூலமாகவும், தியானம், யோகம் போன்றவற்றை அசரீரியாகவோ அல்லது முகம் தெரியாத புதிய நபர் மூலமாகவோ நல்ல விடயங்கள் எமக்குள் பகிரப்பட்டு, அவை எம்முடைய கவனத்திற்குள் சென்று, ஆழ் மனதில் தங்கி... நல்ல அதிர்வலைகளை உருவாக்கும். இதன் மூலம் கர்ம வினைகள் அகன்று எம்முடைய ஆன்மா தூய ஆன்மாவாக மாற்றம் பெறும்.

உடனே எம்மில் சிலர் இது அனைவருக்கும் சாத்தியமா? அல்லது  சிலருக்கு மட்டுமே நடக்குமா? என கேட்பர். முயற்சி செய்தால்... அனைவருக்கும் நடக்கும். சித்தர்கள் இவ்விடயத்தில் எந்த பாகுபாட்டினையும் வைத்துக் கொள்வதில்லை. நாம் விழிப்புடன் இருந்து உள்ளுணர்வில் ஏற்படும் நுட்பமான மாற்றங்களை துல்லியமாக அவதானித்தால்.. ஜீவ சமாதிகளை தொடர்ந்து வழிபடுவதன் மூலம் ஏற்படும் சூட்சுமமான அதிர்வலைகளை உணர்ந்து நல்ல பலனை பெறலாம்.

தொகுப்பு: சுபயோக தாசன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழர்கள் என்பதால் நாம் தமிழ் இலக்கியங்களோடு...

2024-07-15 11:23:10
news-image

யாழ். வட்டுக்கோட்டை சிவபூமி தேவார மடம் ...

2024-07-15 11:57:52
news-image

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய எண்ணெய் காப்பு...

2024-07-09 17:54:00
news-image

தொலஸ்பாகை தாமரவல்லி ஸ்ரீ முருகன் ஆலய...

2024-07-08 18:08:11
news-image

இலங்கையில் இலக்கிய பாரம்பரியம் இன்னும் மாறவில்லை!...

2024-06-29 14:05:39
news-image

"நான் எழுத்தாளராக பிறக்கவில்லை; ஒரு மனுஷியாகத்தான்...

2024-06-19 17:59:32
news-image

உலகில் எங்கும் கேட்கக்கூடாத குரல்! :...

2024-06-19 13:34:15
news-image

21ஆம் நூற்றாண்டில் பல்லவர் கலையின் வரலாறு...

2024-06-11 15:50:21
news-image

பல்­லவர் கால கலை­யம்சங்­க­ளுடன் கும்­பா­பி­ஷேகம் காணும்...

2024-06-09 20:13:09
news-image

நாவலப்பிட்டி ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம் மஹா...

2024-06-01 15:46:52
news-image

மட்டக்களப்பில் வைகாசி மாத கதிர்காம யாத்திரையும்...

2024-05-30 10:23:39
news-image

வைகாசி விசாகத்தின் மகிமை 

2024-05-22 14:20:23