பிரபல ஓவியர் மாருதி காலமானார்

28 Jul, 2023 | 03:06 PM
image

இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல ஓவியர் மாருதி வியாழக்கிழமை காலமானார். அவருக்கு வயது 86. புனேவில் தனது மகள் வீட்டில் தங்கியிருந்த நிலையில் பிற்பகல் 2.30 மணியளவில் உயிர் பிரிந்தது.

புதுக்கோட்டையில் 1938, ஆகஸ்டு 28-ம் தேதி டி.வெங்கோப ராவ், பத்மாவதி பாய் தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர் ஓவியர் மாருதி. இவரின் இயற்பெயர் ரங்கநாதன். வேலைச்சூழலின் காரணமாக, மாருதி என்ற புனைப்பெயரில் பத்திரிகைகளில் ஓவியங்கள் வரைந்து அதன் மூலம் பிரபலமானவர். தஞ்சாவூரைச் சேர்ந்த அரசு ஊழியரான விமலா என்பவரைத் திருமணம் செய்துகொண்ட ஓவியர் மாருதிக்கு சுபாஷினி, சுஹாசினி என இரு மகள்கள் உள்ளனர்.

விகடன், குமுதம், குங்குமம், கண்மணி போன்ற இதழ்களுக்கு அட்டைப்படமும், கதை - கவிதைகளுக்கு ஏற்ற ஓவியங்களும் வரைந்து மக்கள் மத்தியில் பிரபலமானவர். இவரின் ஓவியத்தைப் பாராட்டி தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி இருக்கிறது. ஓவியம் மட்டுமின்றி 'உளியின் ஓசை', 'பெண் சிங்கம்' ஆகிய திரைப்படங்களில் ஆடை வடிவமைப்பாளராகவும் பணி செய்திருக்கிறார்.

இவரின் கைவண்ணத்தில் உருவான ‘எண்ணிலடங்கா ஓவிய தேவதைகளுக்கு கணக்கில்லாத ரசிகர்களை உருவாக்கிக் கொண்டது இவரது தனித்துவம்’ என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திருநீறு பூசும்போது கடைப்பிடிக்க வேண்டியவை!

2023-11-29 12:42:00
news-image

கார்த்திகை மாதத்தில் ஏற்றப்படும் தீபத்தின் மகிமை  

2023-11-22 21:21:02
news-image

அடி பணியும் அதர்மக்காரர்களை மன்னித்து ஆட்கொள்ளும்...

2023-11-18 16:34:58
news-image

"சஷ்டியை நோக்க சரவண பவனார்...!" :...

2023-11-18 13:08:18
news-image

கந்த சஷ்டி வரலாறு....!

2023-11-14 09:25:26
news-image

சகல செளபாக்கியங்களையும் நல்கும் கந்த சஷ்டி...

2023-11-13 17:49:04
news-image

இருளகற்றி ஒளியேற்றும் நன்னாளே தீபத்திருநாள்!

2023-11-08 12:41:53
news-image

கணவனும் மனைவியும் கருத்தொருமித்து வாழ வழிகாட்டும்...

2023-11-09 17:17:21
news-image

தருமையாதீனத்தின் 27வது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ...

2023-11-05 18:39:09
news-image

'நல்லூரான் கட்டியம்' புகழ் விஸ்வ பிரசன்ன...

2023-11-03 14:07:05
news-image

யானையிடம் ஏன் ஆசிர்வாதம் வாங்க வேண்டும்? 

2023-11-02 13:11:36
news-image

இறந்தவர்கள் விண்ணகத்தில் நுழைய வழிகாட்டும் மரித்த...

2023-11-02 12:12:21