முதலாவது ‘ஏற்றுமதி மையம்’ மக்கள் வங்கியின் நுகேகொடை கிளையில் திறப்பு

28 Jul, 2023 | 03:58 PM
image

இலங்கையில் வங்கி மற்றும் நிதிச் சேவைத் துறையில் முன்னணி அரச வங்கியாக உள்ள மக்கள் வங்கி, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்துறை ஏற்றுமதியாளர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் ஏற்றுமதி மையம் என்ற கோட்பாட்டினை அறிமுகப்படுத்தியதன் மூலம் தனது சேவைகளை வழங்குவதில் அண்மையில் மேலும் ஒரு புத்தாக்கமான மேம்பாட்டை செய்துள்ளது.

அதன்படி, வங்கியின் முதலாவது ‘ஏற்றுமதி மையம்’ 18.07.2023 அன்று மக்கள் வங்கியின் நுகேகொடை கிளையில் திறந்துவைக்கப்பட்டது. 

முதற்கட்டமாக, நாடு முழுவதும் உள்ள ஏழு பிராந்தியங்களில் உள்ள ஏழு கிளைகளில் இந்த சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுக்கப்படவுள்ளது.

ஏற்றுமதி மையத்தை திறந்துவைத்து உரையாற்றிய மக்கள் வங்கியின் தலைவரான சுஜீவ ராஜபக்ஷ, 

“சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சியாளர்கள் தொழில் வாய்ப்புகளை வழங்குதல், புத்தாக்கங்களை உருவாக்குதல் மற்றும் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதன் மூலம் எமது நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். 

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகள் இலங்கையில் 75%க்கும் அதிகமான நிறுவனங்களை உள்ளடக்கியதுடன் எங்கள் ஏற்றுமதியில் 20%க்கும் அதிகமான பங்களிப்பை வழங்குகிறது.

அத்துடன், 45% வேலைவாய்ப்பையும் எமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 52% பங்களிப்பையும் வழங்குகின்றன. நாம் ஒரு அரசாங்க வங்கியாக எமது தொழில்முயற்சியாளர்களின் பல்வேறு தேவைகளை புரிந்துகொண்டுள்ளோம். 

மேலும், இந்த புதுமையான கோட்பாட்டின் மூலம் இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான முயற்சிகளை வலுவூட்டுவதே எமது நோக்கமாகும்" என்று குறிப்பிட்டார்.

மக்கள் வங்கியின் பதில் பிரதம நிறைவேற்று அதிகாரியும் பொது முகாமையாளருமான கிளைவ் பொன்சேகா இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், 

“வாடிக்கையாளர்களுக்கு சௌகரியமான சேவையை வழங்கும் நோக்கத்துடன் வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு அனுசரணை அளிப்பதற்காக ஏற்றுமதி மையங்களில் உள்ள எமது பணியாளர்கள் நன்கு பயிற்சியளிக்கப்பட்டு, நிபுணத்துவம் மற்றும் அறிவை வழங்க தயாராக உள்ளனர். 

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் துறையில் ஈட்டப்படும் வெற்றிகள், அதிகளவில் உள்நாட்டு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்பதுடன் நமது நாட்டின் பொருளாதாரத்துக்கு பங்களிக்கும் நிலைபேண்தகு வெளிநாட்டு நாணய உட்பாய்ச்சல்களை ஏற்படுத்தும்” என்று குறிப்பிட்டார்.

மக்கள் வங்கியின் தலைவர் சுஜீவ ராஜபக்ஷ, பதில் பிரதம நிறைவேற்று அதிகாரி - பொது முகாமையாளர் கிளைவ் பொன்சேகா, பிரதிப் பொது முகாமையாளர் (வர்த்தக நிதி) ஏ.எஸ்.எம்.வி. குமாரசிறி, பிரதிப் பொது முகாமையாளர் (தொழில்துறை வங்கிச்சேவை) விக்கிரம நாராயண, பிரதிப் பொது முகாமையாளர் (மார்க்க முகாமைத்துவம்) ரி.எம்.டபிள்யூ. சந்திரகுமார, சந்தைப்படுத்தல் தலைமை அதிகாரி என்.எச். விஜயவர்தன மற்றும் மக்கள் வங்கியின் நிறுவன - நிறைவேற்று முகாமைத்துவ உறுப்பினர்கள், வங்கி ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் போன்றோர் நுகேகொடையில் இந்த முதல் ஏற்றுமதி மையத்தின் திறப்பு விழா நிகழ்வில் கலந்துகொண்டனர்.

1961ஆம் ஆண்டின் 29ஆம் இலக்க மக்கள் வங்கிச் சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட மக்கள் வங்கியானது ரூபா 3.0 டிரில்லியனுக்கும் அதிகமான திரட்டிய சொத்துக்களுடன் நாட்டின் இரண்டாவது பாரிய நிதிச் சேவை வழங்குநராகும்.

தற்போது,வங்கி நாடு முழுவதும் 745 கிளைகள் மற்றும் சேவை மையங்களைக் கொண்டுள்ளதுடன் மற்றும் 14.7 மில்லியனுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களையும் கொண்டுள்ளது.

ஏற்றுமதி மையங்கள் விசேட வீதங்கள், வங்கிச்சேவை வசதிகள், உத்தரவாத வசதிகள், ஆலோசனை மற்றும் அறிவுரை, துணைச் சேவைகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட டிஜிட்டல் மார்க்கங்கள் (நிறுவன இணைய வங்கிச்சேவை) உள்ளிட்ட ஒட்டுமொத்த நிதியியல் தீர்வுகளை வழங்குகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டெல்மேஜ் ஹெல்த்கெயார் மூலம் பல் உட்பொருத்தல்...

2024-06-13 18:52:47
news-image

பூமிக்கு 2,000 மரங்கள் : உலக...

2024-06-13 15:53:57
news-image

கூட்டு ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க கண்டுபிடிப்பு...

2024-06-10 17:55:53
news-image

பான் ஏசியா வங்கியுடன் இலங்கையின் தேசிய...

2024-06-04 11:51:48
news-image

Uber Springboard: இலங்கையில் வழிகாட்டல் திட்டத்துடன்...

2024-06-03 16:42:48
news-image

ராணி சந்தனத்திடமிருந்து வாடிக்கையாளர்களுக்கு தங்கப் பவுண்கள்

2024-06-03 16:53:26
news-image

LMD இன் மிகவும் விரும்பப்படும் தயாரிப்பு...

2024-06-03 17:13:46
news-image

அளவுத்திருத்த சிறப்பின் ரகசியங்களை திறப்பதற்கான நுழைவாயில்...

2024-05-30 17:29:08
news-image

சுங்கத் திணைக்களத்தினால் அபராதம் விதிக்கப்பட்ட நிறுவனம்...

2024-05-21 17:20:25
news-image

2024 ஆம் ஆண்டில் இலங்கையின் 'மிகவும்...

2024-05-20 17:37:24
news-image

"IT Gallery - Hikvision Partner...

2024-05-20 17:31:03
news-image

உள்ளடக்க மேம்பாட்டுப் பட்டறையுடன் முன்னோக்கிச் செல்லும்...

2024-05-20 17:33:11