கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக சட்டவிரோத மணல் அகழ்வுகள் பொலிசாரின் துணையுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறித்த சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் பொலிசாருக்கு அல்லது விசேட அதிரடிப்படையினருக்கு தகவல்களை வழங்கினாலும் அவற்றை அவர்கள் கண்டு கொள்வதில்லை என்றும் அவற்றை ஊக்குவிக்கும் விதத்திலே அவர்களது செயற்பாடு அமைந்திருப்பதாகவும் பொது அமைப்புகளாலும் பொதுமக்களாலும் சுட்டிக்காட்டப்பட்டப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை (28) நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலும் குறித்த விடயம் பற்றி நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் குறித்த பகுதிகளில் குறிப்பாக ஊரியான் முரசுமோட்டை குஞ்சுபரந்தன் குடமுருட்டி செருகன் ஆகிய பகுதிகளில் பொலிசாரின் துணையுடனே குறித்த சட்டவிரோத மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்படுவது தொடர்பில் விவசாய அமைப்புகளாலும் விவசாயிகளாலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
இதே வேளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதிப் பணிப்பாரால் அனுமதியற்ற மணல் அகழ்வுகளால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பிலும் குறிப்பிட்டுள்ளார்
எதிர் காலத்தில் பொலிஸார் மணல் அகழ்வை கட்டப்படுத்துவதற்கு பொலிஸாரால் எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்கலாம் என்ற திட்டத்தை பொலிஸாரே முன்வைக்க வேண்டும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரித்துள்ளார்.
மாவட்டத்தில் தினமும் பொலிசாரால் அவர்களது துணையுடன் பொலிஸ் வாகனங்களோடு பாதுகாப்பாக கொண்டு செல்லப்படுதல் போன்ற படங்களும் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் காட்சிப்படுத்தப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM