குருநாகல் பகுதியில் நிதி நிறுவனமொன்றில் 6 சதவீத வட்டி தருவதாக கூறி பணத்தை முதலீடு செய்தவர்களை ஏமாற்றிய சந்தேக நபரொருவர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அவருக்கு எதிராக பயணத்தடை பெறப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நிதி நிறுவனத்தில் வைத்தியர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், ஓய்வுபெற்ற பாதுகாப்பு அதிகாரிகள், அரச உயர் அதிகாரிகள், அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் தங்களது பணத்தை முதலீடு செய்துள்ளனர்.
குறித்த நபர் கடந்த 2020 ஆம் ஆண்டு 6 சதவீத வட்டியை வழங்வதாக கூறி நிதி நிறுவனத்தை நடத்தி வந்துள்ளதாகவும், கடந்த சில வருடங்களில் சுமார் 8000 முதலீட்டாளர்கள் இந்த நிதி நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்துள்ளதாகவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது .
இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்கு ஆரம்பத்தில் 6 சதவீத வட்டி வழங்கப்பட்டுள்ளதாவும் பின்னர் அது 3 சதவீதமாக குறைக்கப்பட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட்டதாகவும் பின்னர் முதலீடு செய்தவர்களுக்கு பணம் வழங்கப்படவில்லையெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM