களனிவெளி ரயில் பாதையில் ரயில் ஒன்று தடம்புரண்டுள்ளமையால் குறித்த பாதையின் உடனான ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில் கட்டுபாட்டு சபை தெரிவித்துள்ளது.

குறித்த சம்பவம் அவிசாவளையில் இடம்பெற்றமையால் கொழும்பு நோக்கிய மூன்று ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.