பதுளை, பல்லகெட்டுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவில கீழ்பிரிவில் காட்டுக்கு தீ வைக்க முற்பட்ட நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாவில தோட்டம், தெமோதரையைச் சேர்ந்த 61 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
நாவில கீழ்ப்பிரிவு, காட்டுப்பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபடும் நபர்களை கைது செய்வதற்காக பொலிஸார் மறைந்திருந்த வேளையிலேயே குறித்த நபர் சிக்கியுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரை பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது, அவருக்கு 14 நாட்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பதுளை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காட்டுத் தீ சம்பவங்கள் அதிகரித்துள்ளன. மனித செயற்பாடுகள் காரணமாகவே பல பகுதியில் தீ பிடித்து எரிந்து வருகின்றன.
இவ்வாறான நாசகார செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM