தேசிய எல்லை நிர்ணய குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்தாமல் இருக்க தீர்மானம் - ஜானக வக்கும்பர

Published By: Nanthini

28 Jul, 2023 | 11:54 AM
image

(எம்.மனோசித்ரா)

தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் நியமிக்கப்பட்ட தேசிய எல்லை நிர்ணய குழுவின் அறிக்கையை தற்காலிகமாக நடைமுறைப்படுத்தாமல் இருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்பர தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று வியாழக்கிழமை (27) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனை தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தேசிய எல்லை நிர்ணய குழுவின் முழுமையான அறிக்கை எமக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. அந்த அறிக்கையில் உள்ளூராட்சி மன்ற முறைமையில் தற்போது காணப்படுவதை விட, பாரிய சிக்கல்கள் காணப்படுகின்றன. 

8715ஆகக் காணப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கையை 5000ஆக குறைக்குமாறு கூறப்பட்ட நிலையில், இவர்களால் இரு தொகுதிகள் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன.

அவ்வாறு சுமார் 4900ஆக தொகுதிகள் குறைக்கப்பட்டதையடுத்து, பல பிரதேசங்களை இணைப்பதில் பாரிய சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. எனவே, இந்த அறிக்கையை நடைமுறைப்படுத்தினால், இனங்களுக்கிடையிலும் மதங்களுக்கிடையிலும் முரண்பாடுகள் ஏற்படும். இதன் காரணமாக அரசியல் கட்சிகள் அனைத்தும் இதற்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளன.

இதனை நடைமுறைப்படுத்தினால் நல்லிணக்கத்துக்கும் அது பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, குறித்த அறிக்கையை நடைமுறைப்படுத்துவதை நாம் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளோம். உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 8000இலிருந்து 5000 - 4000 வரை குறைக்க வேண்டும் என்ற ஜனாதிபதியின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை.

எனவே, விரைவில் இது தொடர்பில் மீண்டும் ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடப்பட்டு தீர்மானம் எடுக்கப்படும். தற்போதுள்ள முறைமையில் தேர்தலை நடத்தி 8000 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டால், அதுவும் பிரச்சினைகளை தோற்றுவிக்கும். மக்களும் அதனை விரும்பமாட்டார்கள். உள்ளூராட்சி மன்றங்களில் காணப்படும் பிரச்சினைகளை தீர்ப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பே தவிர, புதிய பிரச்சினைகளை ஏற்படுத்திக்கொள்வதல்ல.

அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டியது கட்டாயமாகும். எனவே, உரிய நேரத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும். அதற்கான நடவடிக்கைகளை உரிய நேரத்தில் அரசாங்கம் முறையாக முன்னெடுக்கும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58