இலங்கையைச் சேர்ந்த நோர்வே நாட்டில் வசித்து வருகின்ற வைத்திய கலாநிதி எட்வெட் எல்மர் நேற்று வியாழக்கிழமை (28) பின் தங்கிய கிராமத்தில் உள்ள இரு பாடசாலை மாணவர்களுக்கு மனிதாபிமான பணியை செய்துள்ளார்.
வைத்திய கலாநிதி எட்வெட் எல்மர் மன்னார் மாவட்டம் குஞ்சுக்குளம் பகுதிகளில் உள்ள இரண்டு பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 200 மாணவர்களுக்கு போசக்கை மேம்படுத்தும் வகையில் விற்றமீன் மருந்துகளை வழங்கி வைத்துள்ளார்.
இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து சென்று நோர்வே நாட்டில் வசித்து வருகின்ற வைத்திய கலாநிதி எட்வெட் எல்மர் தனது குடும்பத்துடன் இலங்கைக்கு வருகை தந்த நிலையில் குறித்த மனிதாபிமான பணியை முன்னெடுத்துள்ளார்.
வியாழக்கிழமை (27) குறித்த பின் தங்கிய கிராமத்தில் உள்ள இரு பாடசாலைகளுக்குச் சென்று மாணவர்களுக்கான உடல் பரிசோதனை மேற்கொண்டதோடு, அவர்களுக்கு தேவையான விற்றமீன் அடங்கிய மருந்துகள் வழங்கி வைத்துள்ளார்.
இதன்போது, குறித்த வைத்தியரோடு மடு வைத்திய அதிகாரி வைத்தியர் டெனி மற்றும் வைத்திய கலாநிதி ஞா.குணசீலன் ஆகியோரும் சென்றிருந்தனர்.
இலங்கையில் தற்போது வைத்திய துறையில் பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ள நேரத்தில் குறித்த வைத்தியரின் மனிதாபிமான பணி மிகவும் வரவேற்க தக்க ஒன்றாகும்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM