மெலஸ்மா எனும் தோல் பாதிப்பிற்குரிய நவீன லேசர் சிகிச்சை

Published By: Ponmalar

28 Jul, 2023 | 11:12 AM
image

புவி வெப்பமயமாதல் காரணமாக கோடை காலம் தவிர்த்த ஏனைய பருவ காலங்களிலும் சூரிய ஒளியின் தாக்கம் அதிகமாக இருக்கிறது என சுற்றுப்புற சூழல் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

இதன் காரணமாக பெண்களில் 90 சதவீதத்தினருக்கும், ஆண்களில் 10 சதவீதத்தினருக்கும் மெலஸ்மா எனப்படும் தோல் பாதிப்பு ஏற்படுவதாக மருத்துவர் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். இதற்கு தற்போது லேசர் தெரபி மூலம் முழுமையான நிவாரணத்தை பெற இயலும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

மெலஸ்மா என்பது தோலில் ஏற்படும் ஒரு வகையினதான பாதிப்பாகும். இது குறிப்பாக முகத்தில் உள்ள கன்னங்கள், நெற்றி, மூக்கின் பகுதி, மேல் உதடு.. ஆகியவற்றில் பழுப்பு அல்லது சாம்பல் நிற திட்டுகளை உருவாக்குகிறது. சிலருக்கு இது கைகள் மற்றும் கழுத்து போன்ற சூரிய ஒளி அதிகமாக படும் பகுதிகளிலும் தோன்றுகிறது. சில பெண்மணிகளுக்கு அவர்கள் கருத்தரித்திருக்கும் காலகட்டத்தில் இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது.

இதற்கான காரணம் துல்லியமாக அவதானிக்கப்படவில்லை என்றாலும், இவை பல காரணிகளை உள்ளடக்கியதாக கருதப்படுகிறது. குறிப்பாக சூரியனிலிருந்து வெளியாகும் புற ஊதா கதிர்கள் தோலின் நிறத்திற்கு காரணமான நிறமியான மெலனின் என்னும் ஹோர்மோனின் உற்பத்தியை இயல்பான அளவிலிருந்து கூடுதலாகவோ அல்லது இயல்பான அளவிலிருந்து குறைவாகவோ தூண்டுகிறது. இதன் காரணமாக மெலஸ்மா திட்டுகள் உருவாகிறது. இவை பெரும்பாலும் சூரிய ஒளியில் தோன்றுகிறது.

வேறு சிலருக்கு ஹோர்மோன் சுரப்பிகளின் செயல்பாட்டில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாகவும், சிலர் ஹோர்மோன் சுரப்பிகளின் செயல்பாட்டிற்காக மருந்துகளை எடுத்துக் கொள்ளும் போதும் இத்தகைய பாதிப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். சிலருக்கு மரபியல் காரணமாகவும் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும்.

மெலஸ்மா பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அதனை துல்லியமாக அவதானித்து, பிரத்யேக கிறீம்கள் மூலம் முதன்மையான நிவாரணம் அளிக்கப்படுகிறது. சிலருக்கு இதன் போது பிரத்யேக லேசர் தெரபி மூலமாகவும் நிவாரணம் வழங்கப்படுகிறது.

இத்தகைய பாதிப்புள்ள இளம் பெண்களுக்கு தன்னம்பிக்கையுடன் செயல்படுவதில் பாரிய இடையூறை ஏற்படுத்துவதால், இதற்கான சிகிச்சையை பெற்று நிவாரணம் பெறுவது தான் சரியான தீர்வாகும்.

டொக்டர் தீப்தி,
தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அசாதாரண கருப்பை ரத்தப்போக்கு பாதிப்பிற்குரிய நவீன...

2024-06-12 13:23:09
news-image

இடைநிலை நுரையீரல் தொற்று பாதிப்பிற்குரிய நவீன...

2024-06-12 09:12:17
news-image

மூளை கட்டியின் வகைகளும், காரணங்களும்...!?

2024-06-10 17:28:32
news-image

நீரிழிவு நோயால் நரம்பு மண்டல பாதிப்பு...

2024-06-08 16:19:56
news-image

பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் மூளை ரத்த...

2024-06-07 18:48:18
news-image

குழந்தைகளுக்கு பிறவியிலேயே இதய குறைபாடு ஏற்படுவதை...

2024-06-04 14:04:02
news-image

உறக்கமின்மை குறைபாட்டை களைவதற்கான எளிய வழிமுறைகள்.?

2024-06-03 15:51:07
news-image

இரத்த சர்க்கரையின் அளவை உயர்த்தும் காரணிகள்...?!

2024-06-01 20:22:03
news-image

அடி வயிற்று தசை பிடிப்பு பாதிப்பிற்கான...

2024-05-31 16:33:40
news-image

முக வீக்க பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-05-30 17:29:57
news-image

பெட்ஸோர்ஸ் எனும் தோலில் ஏற்படும் பாதிப்பிற்குரிய...

2024-05-29 17:38:38
news-image

இரத்த நாள பாதிப்பிற்குரிய காரணங்கள் என்ன?

2024-05-28 15:34:49