யாழில் பிரார்த்தனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த முதியவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published By: Digital Desk 3

28 Jul, 2023 | 09:57 AM
image

வீட்டில் பூஜை அறையில் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த வயோதிபர் ஒருவர் மயங்கி விழுந்து மரணம் அடைந்த சம்பவம் யாழ்ப்பாணம் - வடமராட்சியில் இடம்பெற்றுள்ளது.

வடமராட்சி - ஊறணி பகுதியைச் சேர்ந்த செல்வராசா செல்வமனோகரன் (வயது- 67) என்பவர் நேற்று வியாழக்கிழமை (27) உயிரிழந்துள்ளார்.

நேற்றைய தினம் அதிகாலை 5.30 மணியளவில் வீட்டு பூஜை அறையில் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தபோது அவர் மயங்கி சரிந்து விழுந்துள்ளார். அவரைப் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியரால் தெரிவிக்கப்பட்டது.

பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தம் சிவராஜா இம்மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு உடற்கூற்று பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.

உடற் கூற்று பரிசோதனையில் மரணத்துக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் அவரின் உடற்கூற்று மாதிரிகள் இரசாயனப் பகுப்பாய்விற்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றும் மின்வெட்டு !

2025-02-13 09:16:59
news-image

தையிட்டி சட்டவிரோத விகாரை விவகாரம் -...

2025-02-13 08:49:04
news-image

இன்றைய வானிலை

2025-02-13 06:05:42
news-image

மக்களின் காணி மக்களுக்கே சொந்தம் -...

2025-02-13 03:11:18
news-image

இழப்பீட்டுக்கான விசாரணையை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளமை மகிழ்ச்சிக்குரியது...

2025-02-12 18:15:45
news-image

குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமா?...

2025-02-12 18:23:26
news-image

யாழ்ப்பாணத்தில் பழைய அரசியல் கலாசாரம் தோற்கடிக்கப்பட்டுள்ளது...

2025-02-12 18:13:39
news-image

இலங்கையில் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஒரகல் நிறுவனம்...

2025-02-12 21:15:49
news-image

எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் தொடரும் தையிட்டி சட்டவிரோத...

2025-02-12 21:11:13
news-image

இழப்பீட்டுத் தொகை குறித்து பேசும் ஆளும்...

2025-02-12 18:05:05
news-image

ஐக்கிய தேசிய கட்சியுடனான பேச்சுவார்த்தை தற்காலிகமாக...

2025-02-12 18:23:50
news-image

உலக காலநிலை பிரச்சினைகளை முகங்கொடுக்க உலகளாவிய...

2025-02-12 19:49:02