மன்னார் உட்பட வடக்கு கிழக்கு பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி தொடர்பில் நீதியான விசாரணை கோரியும் குறிப்பாக முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி விசாரணையில் சர்வதேச நிபுணர்களும் உள்வாங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை(28) பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை (28) மன்னார் மக்களும் ஹர்த்தாலுக்கு ஆதரவை வழங்கியிருந்தனர். அத்தியாவசிய சேவைகளை தவிர்ந்த அனைத்து தனியார் சேவைகளும் இன்றைய தினம் இயங்கவில்லை. பெரும்பாலான வர்த்தக நிலையங்களும் மூடப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.
எனினும் தமக்கு வர்த்தக நிலையங்களை மூட வர்த்தக சங்கம் உரிய முறையில் கோரிக்கை விடவில்லை என வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் தனியார் போக்குவரத்துச் சேவைகள் இடம் பெறவில்லை. அதே நேரம் பாடசாலைகளுக்கு மாணவர்களின் வருகை மிக குறைவாக காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM