bestweb

சில பகுதிகளில் மழை, ஓரளவு பலத்த காற்று வீசும்

Published By: Digital Desk 3

28 Jul, 2023 | 08:55 AM
image

இன்று (ஜூலை 28) மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, நாட்டின் மற்ற பகுதிகளில் முக்கியமாக சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், மொனராகலை, அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

கடல் :

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

காற்று தென்மேற்கு திசையில் மணிக்கு 30-40 கி.மீ  வேகத்தில் வீசும்.

அம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் சிலாபத்திலிருந்து மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.

அம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளும், சிலாபத்திலிருந்து மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாக காணப்படும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புக்கள் மிதமானதாக இருக்கலாம்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வவுனியா - கூமாங்குளத்தில் இடம்பெற்ற வன்முறைச்...

2025-07-19 01:23:07
news-image

தென்மேற்கு பருவமழை தீவிரம் : பல...

2025-07-19 01:20:20
news-image

வவுனியாவில் ஐஸ் போதைப் பொருளுடன் மூவர்...

2025-07-19 01:11:43
news-image

முச்சக்கரவண்டி மற்றும் கார் மோதி விபத்து:...

2025-07-19 01:09:10
news-image

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட சபாநாயகர்

2025-07-19 00:54:25
news-image

யாழ்ப்பாணத்தில் இசைத்துறையில் ஆர்வமுள்ளவர்களுக்கு பயற்சிகள் வழங்க...

2025-07-18 21:25:41
news-image

மருந்துகளைப் பெற வைத்தியசாலைகளுக்கு பணம் ஒதுக்கப்பட்டுள்ளது...

2025-07-18 19:28:23
news-image

மருந்தாளுநர்களின் பற்றாக்குறைக்கு தீர்வு காண திட்டமொன்று...

2025-07-18 20:29:55
news-image

விடுதலைப் புலிகள் சிங்களவர்களை படுகொலை செய்தது...

2025-07-18 19:30:03
news-image

புதிய கல்வி மறுசீரமைப்பு முறைமைக்கு ஆசிரியர்...

2025-07-18 16:53:19
news-image

கொழும்புத் திட்டத்தின் 74வது ஆண்டு விழாவில்...

2025-07-18 19:19:10
news-image

அரச சேவையாளர்கள் தமக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்துடன்...

2025-07-18 17:42:16