சர்வதேச விசாரணை மூலமாகத்தான் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பதை நிரூபிக்க முடியும் - பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்

Published By: Vishnu

27 Jul, 2023 | 01:24 PM
image

சர்வதேச விசாரணை மூலமாகத்தான் இலங்கையில் நடந்தது  இனப்படுகொலை என்பதை நிரூபிக்க முடியும்.எனவே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கேட்கின்ற சர்வதேச விசாரணை நியாயமானது.

அவர்களுடைய கோரிக்கைக்கு பூரணமான ஆதரவு வழங்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

மன்னாரில் புதன் மாலை (27) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

2015  ஆம் ஆண்டு ஐந்தாம் ஆண்டு ஐ.நா.மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக  சர்வதேச கண் காணிப்பாளர்களின் விசாரணை வேண்டும் என்பதே எங்களுடைய தொடர்ச்சியான வலியுறுத்தல்.

அதன் அடிப்படையில் தான் எங்களுடைய தொடர்ச்சியான கோரிக்கை அமைகிறது. காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின்  கோரிக்கை என்பது  நியாயமான ஒரு கோரிக்கையாக உள்ளது.

இங்கு கொலை செய்தவர்களே  விசாரணை செய்வதும், தீர்ப்பளிப்பதுமான ஒரு நாடாக இலங்கை இருக்கிறது. யார் கொன்றார்களோ, யார் எங்களுக்கு மிகப்பெரிய  அழிவை ஏற்படுத்தினார்களோ அவர்களே அதனை விசாரிப்பதும், அதற்குரிய தீர்ப்பு வழங்குவதற்கான ஒரு நாடாக இலங்கை இருக்கின்றது.

இங்கு நடந்த மனித படுகொலைக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு அதாவது ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது  என்பதை கூட விசாரிக்கின்றவர்கள் அவர்களை காணாமல் ஆக்கியவர்கள்.

எனவே சர்வதேச விசாரணை என்பது தொடர்ச்சியான கோரிக்கை. அது கட்சிக்கு அப்பால் வடக்கு கிழக்கிற்கு அப்பால் அனைத்து தமிழ் கட்சிகளின் கோரிக்கை யாகவும் உள்ளது.

சர்வதேச விசாரணை மூலமாகத்தான் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பதை நிரூபிக்க முடியும்.

எனவே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கேட்கின்ற சர்வதேச விசாரணை நியாயமானது. அவர்களுடைய கோரிக்கைக்கு பூரணமான ஆதரவு வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினைகளை கதைப்பதற்கு ஜீவன்...

2025-02-06 18:54:04
news-image

தேசியக் கொடியை இறக்கிவிட்டு கறுப்புக் கொடியை...

2025-02-06 19:11:23
news-image

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையில் மாற்றமில்லை தற்போதைய...

2025-02-06 16:24:53
news-image

சர்ச்சைக்குரிய கிரிஷ் கட்டிடத்தில் தீ

2025-02-06 21:41:18
news-image

பரிசோதனை செய்யப்படவேண்டிய கொள்கலன்களை பரிசோதனையின்றி விடுவித்தமைக்கு...

2025-02-06 19:10:02
news-image

சேறு பூசலை பிரத்தியேக நாமமாக பயன்படுத்த...

2025-02-06 17:18:25
news-image

பதவி விலகவுள்ள ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள்...

2025-02-06 16:48:03
news-image

டிஜிட்டல் சமூகத்தை நோக்கி நாட்டை கொண்டுச்...

2025-02-06 20:52:31
news-image

ஜனாதிபதிக்கும் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளுக்கும்...

2025-02-06 20:42:13
news-image

''நடுவே பாய வேண்டாம்'' பிரதி சபாநாயகரை...

2025-02-06 19:11:52
news-image

கிழக்கு மாகாணத்தில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில்...

2025-02-06 14:33:26
news-image

புதிய முப்படைத் தளபதிகள் ஜனாதிபதியை சந்தித்தனர் 

2025-02-06 19:24:44