மட்டக்களப்பில் காட்டுப் பகுதியில் தாய் யானை காயமுற்றதால் குட்டி யானை வன ஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்களால் மீட்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்று புதன்கிழமை (26) இரைவு மணியளவில் இடம் பெற்றது.
மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட வந்தாறுமூலை குடாவெட்டை காட்டுப்பகுதியில் தாய் யானை காயமடைந்து கீழே விழுந்துள்ளது.
இந்நிலையில், அதன் குட்டி யானை அனாதரவான நிலையில் தவித்துள்ளது.
சுமார் மூன்று வயதுடைய குறித்த குட்டி யானையை பலத்த சிரமத்திற்கு மத்தியில் மட்டக்களப்பு மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்களபணிப்பாளர் எஸ்.சுரேஸ்குமார் தலைமையிலான வன அதிகாரிகள் காட்டுப் பகுதிக்குச் சென்று காப்பாற்றி அம்பாறைக்கு எடுத்துச் சென்றனர்.
குறித்த குட்டி யானையை காப்பாற்றிய காட்டுப் பிரதேசத்தில் வன ஜீவராசிகள் அதிகாரிகளைச் சுற்றி பெரும் எண்ணிக்கையிலான யானைகள் கூட்டமாக சுற்றித்திரிந்ததை அவதானிக்க முடிந்தது.
யானை வெடிகளை கொழுத்தி வீசியும், காட்டுப் பகுதியில் தீவைத்தும் குறித்த யானைகளை துரத்தியதன் பின்னர் குட்டி யானையை மீட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM