பெண்ணின் காதணி துவாரத்தில் நுழைந்த பாம்பு

Published By: Raam

01 Feb, 2017 | 05:36 PM
image

அமெரிக்காவில் பாம்புடன் விளையாடிக்கொண்டிருந்த பெண் ஒருவரின் காதணி துவாரத்திற்குள் நுழைந்த பாம்பு அதில் சிக்குண்டு வெளியில் வரமுடியாமல் தவித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஓரிகன் மாகாணத்தை சேர்ந்த அஷ்லே கிலவெ என்ற பெண்ணின்  செல்லப்பிராணியாக வளர்த்து வந்து பல் பைதான் என்ற பாம்புடன் தினந்தோறும் விளையாடுவது வழக்கமாக கொண்டுள்ளவர்.

இந்நிலையில், குறித்த பாம்பு இவரின் தலையில் ஏறி விளையாடிக்கொண்டிருந்த போது தலையின் பக்கவாட்டு பகுதியாக கீழிறங்கி, காதில் காதணி அணியும் துவாரப்பகுதிக்குள் நுழைந்து பாதி உடம்பு உள்ளே சென்ற நிலையில், அந்த பாம்பு இடையில் சிக்கி கொண்டது. 

பாம்பினை தனது காதணி துவாரத்திலிருந்து எடுப்பதற்கு வைத்தியசாலையிற்கு சென்றவேளையில் காதில் இருந்த பாம்பினை பார்த்த வைத்தியர்கள் முதலில் அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் பாரிய முயற்சியின் பின் காதணி துவாரத்திலிருந்து பாம்பினை மீட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்ட சிகிச்சையளித்த வைத்தியர்கள் இப்படி ஒரு சிகிச்சையை நாங்கள் இதுவரை மேற்கொண்டதில்லை என தெரிவித்துள்ளனர்.

மேலும், குறித்த பெண் பாம்பு தனது காதணி துவாரத்தில் சிக்குண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படத்தினை தனது பேஸ்புக் கணக்கில் பதிவேற்றியுள்ளார். குறித்த படம் தற்போது பலராலும் பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right