பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தின் சிறை அறையிலிருந்து  இரண்டு போதைப்பொருள் பக்கற்றுகள் மீட்கப்பட்டுள்ளன.

கைதிகளை நீதிமன்ற அறையில் அடைப்பதற்கு அழைத்துச்சென்ற போது சிறைச்சாலை அதிகாரி ஒருவரால் குறித்த போதைப்பொருள் பக்கற்றுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த போதைப்பொருள் பக்கற்றுகள் சுவிங்கத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்துக்கு வருகைத்தரும் கைதிகளுக்கு வழங்குவதற்காக குறித்த போதைப்பொருட்கள் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.