மின்சார கட்டண அதிகரிப்பு சட்டப்பூர்வமானதா ? ஆராய குழுவொன்றை அமைக்கவும் - எதிர்க்கட்சிகள் சபாநாயகருக்கு பிரேரணை கையளிப்பு

Published By: Vishnu

26 Jul, 2023 | 10:03 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

இலங்கை மின்சாரசபை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் சட்ட திட்டங்களுக்கு முரணாக மின்சார கட்டண திருத்தம் மேற்கொண்டுள்ளதா என தேடிப்பார்க்க பாராளுமன்ற எதிர்க்கட்சி குழுவொன்றை நியமிக்குமாறு தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளி்ட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் சபாநாயகரிடம் பிரேரணை ஒன்றை கையளித்துள்ளர்.

குறித்த பிரேரணை பாராளுமன்ற புதிய ஒழுங்குப்புத்தகத்திலும் உள்வாங்கப்பட்டிருக்கிறது.

குறித்த பிரேரணை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட ஐக்கிய மக்கள் சக்தி, சுதந்திர மக்கள் சபை மற்றும் மேலவை இலங்கை சபை ஆகிய கட்சிகளின் உறுப்பினர்களின் கையொப்பத்துடனே சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டிருக்கிறது.

பிரேரணையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, லக்ஷ்மன் கிரியெல்ல, ஜீ.எல். பீரிஸ், கயந்த கருணாதிலக்க,சந்திம வீரக்கொடி, நாலக்க கொடஹேவா, ஜே.சி. அலவத்துவல, ஹர்ஷண ராஜகருணா, சுஜித் சஞ்சய பேரேரா, டபிள்யூ. எச். தர்மசேன, ரஞ்சித் மத்தும பண்டார, கபீர் ஹாசிம், புத்திக பத்திரண, உதய கம்மன்பில, திஸ்ஸ அத்தநாயக்க, வீ. இராதாகிருஷ்ணன் மற்றும் எஸ்.எம்.மரிக்கார் ஆகியோரே கைச்சாத்திட்டுள்ளனர்.

இலங்கை மின்சாரசபையின் கட்டண திருத்தத்தில் சட்டப்பூர்வமான தன்மை தொடர்பில் விசாரணை மேற்கொண்டு சட்டப்பூர்வமற்றதென தெரிந்துகொண்டால், பொறுப்புக்கூறவேண்டியவர்களுக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கையை பரிந்துரைசெய்வதற்கும், குறைந்த வருமானமுடைய நுகர்வோர், வீடு, மத மற்றும் தொண்டு நிறுவன நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கி  கட்டண அமைப்பொன்றை தயாரிப்பதற்கு பரிந்துரை சமர்ப்பிப்பதற்காகவும் பாராளுமன்ற எதிர்க்கட்சியின் குழுவொன்றை நியமிக்குமாறு குறித்த பிரேரணை மூலம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மின் கம்பத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்;...

2025-02-18 03:55:17
news-image

சுழிபுரத்தில் கோடாவுடன் ஒருவர் கைது!

2025-02-18 03:49:47
news-image

தமிழ் இளைஞர் தோட்ட உத்தியோகஸ்த்தரால் நாய்களை...

2025-02-18 03:47:27
news-image

எமது அரசாங்கத்தில் ஆரம்பித்தவற்றை தேசிய மக்கள்...

2025-02-18 03:39:40
news-image

அரசாங்கத்துக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளவர்கள் அரசாங்கத்துக்கு...

2025-02-18 03:58:04
news-image

ஜனாதிபதியின் வரவு செலவு திட்டத்தையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்;...

2025-02-18 03:21:04
news-image

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின்...

2025-02-18 01:26:35
news-image

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் எந்த தரப்பினரையும்...

2025-02-17 21:38:57
news-image

ஏப்ரல் மாதத்துக்கு பின்னர் தேர்தலை நடத்துவதற்கு...

2025-02-17 21:37:41
news-image

நிபந்தனைகள் இன்றி பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படாவிட்டால் இணைவு...

2025-02-17 17:45:28
news-image

வரவு - செலவுத் திட்டத்தின் மீதான...

2025-02-17 21:38:19
news-image

நாணய நிதியத்தின் பணயக் கைதிகள் போன்று...

2025-02-17 21:37:56