மலையாளத்தில் வெளியாகி பெரிய அளவில் வசூலை குவித்த படம்  ”பெங்களூர் டேய்ஸ்” (BANGALORE DAYS)  இந்த திரைப்படத்தை தற்போது தமிழில் ”பெங்களூர் நாட்கள்” என்ற பெயரில் பிவிபி சினிமா தயாரித்திருக்கிறது. தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி படங்களை கொடுத்த தமிழ் இயக்குநர் ”பொம்மரில்லு” பாஸ்கர்  இதனை இயக்கியிருக்கிறார்.  இதன் முதல் தோற்றம் (FIRST LOOK)  வெளியாகி அனைவரையும் கவர்ந்துள்ளது.  

இதில் ஆர்யா, பொபி சிம்ஹா, ஸ்ரீதிவ்யா. சமந்தா, பார்வதி, ராய்லட்சுமி மற்றும் பிரகாஷ்ராஜ் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடிடித்திருக்கிறது.

மூன்று கசின்கள்(COUSINS) தங்களுக்குள் அன்பையும் நட்பையும் கொண்டாட்டங்களையும் எப்படி ஏற்படுத்தி கொண்டார்கள் என்பதையும் அவர்களுக்கு வரும் வாழ்க்கை மாற்றங்களை எப்படி எதிர்கொண்டார்கள் என்பதையும் பெங்களூர் நகர பின்னணியில் மிக ஜாலியாக சொல்லியிருக்கிறார்கள்

பிப்ரவரியில் வெளியாக இருக்கும் இத்திரைப்படத்தை பிவிபி சினிமா பிரமாண்டமாய் தயாரித்திருக்கிறது. வழக்கமாக நண்பர்களின் வாழ்க்கையையும் நட்பையும் பற்றி மட்டுமே பார்த்த தமிழ் சினிமாவில் மூன்று கசின்களின்(COUSINS) கதையை படமாக பார்ப்பது ஒரு புது அனுபவமாக இருக்கும். குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் பார்க்கும் படமாகவும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் தங்களுடைய வாழ்க்கையோடு அடையாளப்படுத்துக்கொள்ளும் படமாகவும் அமைந்திருப்பது இந்த படத்தின் பலம். என்றாலும் கூட தோல்விகளால் துவண்டு இருக்கும் நடிகர் ஆர்யாவின் திரையுலக வாழ்வை தீர்மானிக்கும் படமாக பெங்களூர் நாட்கள் அமையும் என்கிறார்கள் அவரது ரசிகர்கள்.

தகவல் : சென்னை அலுவலகம்