கனேடிய பிரதமர் ஜஸ்ரின் டுரூடோ தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் மற்றும் பேஸ்புக்  பக்கங்களில் தரவேற்றிய தரவுகளுக்கு இலட்சக்கணக்கில் வரவேற்புக்கள் குவிந்துள்ளன.

பன்முகத்தன்மையே எமது பலம் . தீவிரவாதம் மற்றும் யுத்தத்தால்  துன்புறுத்தல்களுக்குள்ளாக்கப்பட்டு தப்பி ஓடிவருவோரை கனேடியர்கள் வரவேற்பர். எல்லா மதத்தினருக்கும் இடம் உண்டு. கனடா உங்களை வரவேற்கிறது. என அவரது டுவிட்டர் மற்றும் பேஸ்புக் பக்கங்களில் தரவேற்றியுள்ளார்.

இக் கருத்துக்கும் அமெரிக்காவில் இடம்பெற்றுவரும் மாற்றங்களுக்கும் ஒற்றுமைகள் இருப்பதை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது.