பதுளை மாவட்டத்தில் காட்டுத் தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை

Published By: Digital Desk 3

26 Jul, 2023 | 03:18 PM
image

பதுளை மாவட்டத்தில் நிலவும் வறட்சியான காலநிலையை சாதகமாகக் கொண்டு விஷமிகள் காடுகளுக்கு தீ வைக்கும் செயற்பாடுகள் அதிகரித்து வருவதாக பதுளை மாவட்ட செயலாளர் பிரபாத் அபேவர்தன தெரிவிக்கின்றார். 

பதுளை மாவட்டத்தில் காடுகளுக்கு தீ வைக்கும் செயற்பாட்டை தடுப்பதற்கான முன்னாயத்த  நடவடிக்கைகளை எவ்வாறு  மேற்கொள்வது  என்பது தொடர்பாக ஆராயும் கூட்டம் பதுளையில் உள்ள தனியார் விருந்தகமொன்றில் நடைபெற்ற போது கூட்டத்திற்கு தலைமை தாங்கி உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

பதுளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சுதர்ஷன தெனிபிட்டிய, மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலாளர்கள், வன பாதுகாப்பு, வனவிலங்கு  பராமரிப்பு திணைக்களங்களின் பணிப்பாளர்கள், மாவட்டத்தில் உள்ள முப்படைகளின் உயரதிகாரிகள்,  மாவட்ட காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் தலைவர் உட்பட முக்கிய திணைக்களங்களின் அதிகாரிகளும் கூடத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

அங்கு  மேலும் கருத்து தெரிவித்த அவர்,

இதுவரையான காலப் பகுதியில் 60 கிராம சேவையாளர் பிரிவுகளில் உள்ள காடுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது. சிலவேளை  இத்தொகை இன்னும் அதிகமாக இருக்கலாம். காடுகளுக்கு தீ பரவும் போது அதைத் அணைப்பதற்கு பொதுமக்கள் வழங்கும் பங்களிப்பு  மிகவும் குறைவாக உள்ளது. அவர்கள் தீயினால் பாதிக்கப்படும் காட்டு விலங்குகளை வேட்டையாடுவதில் அதிக கவனம் செலுத்துவதிலும், சம்பவத்தை  வீடியோ எடுத்து சமூக வலை தளங்களில் பதிவேற்றுவதிலுமே ஆர்வம் காட்டுகின்றனர். இது சமூகம் என்ற வகையில் நாம்வெட்கப்பட வேண்டிய விடயம் இன்னும் இரு மாதங்களுக்கு வறட்சியான காலநிலையை மாவட்டத்தில் நிலவும் ஆகையால் இந் நாசகார செயற்பாட்டைத் தடுத்து நிறுத்த ஒன்றிணைந்த வேலைத்திட்டம் அவசியம் என்றார். 

இதன் போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஷன  தெனிபிட்டிய

கடந்த  ஞாயிற்றுக்கிழமை எல்ல பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சுற்றுலாப் பயணிகளை கவரும் மூன்று இடங்களில் நாசகார கும்பலால் ஒரே சமயத்தில் காடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. இதன் காரணமாக எல்ல நகர் பகுதியில் உள்ள குடியிருப்புகள், “நைன்ஆச் ” எனப்படும் 9 வளைவுப் பகுதி, பொலிஸ் நிலையப் பகுதி என்பவற்றிற்கு கடும் பாதிப்பு ஏற்பட்டதுடன் ரயில் கடவைகளுக்கும் தீ பரவும் அபாயம் ஏற்பட்டது. 

இறுதியில் விமானப்படையினரின் ஹெலிகாப்டர் மூலம் தீ பரவல் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது என்றார்.

இதனை தடுக்க  பிரதேச செயலக மட்டத்தில் கிராம சேவை உத்தியோகத்தர்கள் ஊடாக சிரமதானப் பணிகளை முன்னெடுக்கவும், புகையிரத கடவைகளின் இரு மருங்கையும் துப்புரவு செய்யவும்,  வணக்கஸ்த்தலங்களில் பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தி காட்டுத் தீ  தொடர்பாக மக்களை தெளிவுப்படுத்தவும், பொலிஸ்  மற்றும் இராணுவத்தின் உதவியுடன் அனர்த்த பிரதேச மக்களின் வீடுகளுக்கு சென்று தெளிபடுத்தவும், சிவில் பாதுகாப்பு குழுக்களை பயிற்சியுடன் தயார்படுத்தவும், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில் இவ்விடயம் தொடர்பாக தகவல் தொடர்பு அலகினை ஏற்படுத்தவும், பயர் பெல்ட், பயர் பெல்களை அமைக்கவும், அனர்த்த பிரதேசங்களை முன்கூட்டி அடையாளம் கண்டு பாதுகாப்பு முன் ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் , மாவட்டத்தில் உள்ள தோட்ட முகாமையாளர்களுடன் கலந்துரையாடி தோட்டங்களை பாதுக்கவும்,  காடுகளுக்குள் உள்ள நடைபாதைகளை அடையாளப்படுத்தவும், சந்தேக நபர்களை அடையாளம் காண பொதுமக்கள் உதவி பெறவும் கலந்துரையாடலில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன. 

       

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வனவிலங்குகளின் கணக்கெடுப்பு ஆரம்பம்

2025-03-15 13:31:02
news-image

லுணுகம்வெஹெர பகுதியில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர்...

2025-03-15 13:16:50
news-image

ஓமந்தையில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது...

2025-03-15 13:13:56
news-image

பாடசாலை மாணவர்கள், இளைஞர், யுவதிகளை இலக்கு...

2025-03-15 13:00:54
news-image

வெளிநாட்டில் வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாக...

2025-03-15 12:50:03
news-image

கண்டியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில்...

2025-03-15 12:28:06
news-image

புதுக்குடியிருப்பில் விபத்து ; இளைஞன் உயிரிழப்பு

2025-03-15 12:08:29
news-image

முதியவரை காப்பாற்றச் சென்ற தந்தை பொல்லால்,...

2025-03-15 11:54:12
news-image

மட்டு. சந்திவெளி காட்டு பகுதியில் ஆண்...

2025-03-15 11:35:24
news-image

மதுபோதையில் நான்கு நண்பர்களுக்கிடையில் தகராறு ;...

2025-03-15 11:12:51
news-image

முல்லைத்தீவில் ஆயிரக்கணக்கான துப்பாக்கி ரவைகள் மீட்பு...

2025-03-15 10:37:52
news-image

சம்மாந்துறையில் தேக்கு மரப்பலகைகளை வாகனத்தில் கடத்திய...

2025-03-15 10:18:32