(ஆர்.யசி )

சுமந்திரனின் உயிர் அச்சுறுத்தலுக்கு அவரே பொறுப்பு கூறவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். 

விடுதலைப்புலிகளை விடுதலை செய்யகோரி அன்று குரல் எழுப்பியவர்கள் இன்று எம்மை குறை கூறுகின்றனர். விடுதலைப் புலிகளை விடுதலை செய்தமை தவறில்லை.  அரசாங்கம் தேசிய பாதுகாப்பை பலவீனமாக கையாளுகின்றமையே தவறாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.  

முன்னாள் ஜனாதிபதி நேற்று அனுராதபுரம் ஸ்ரீமா போதி விகாரைக்கு விஜயம் மேற்கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார். இதன் பின்னர் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.