மொழி என்பது தோனிக்கும், தமிழ்மக்களுக்கு தடையாக இருந்தது கிடையாது. இந்த படத்திற்கு தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என தோனியின் மனைவி சாக்ஷி சிங் தெரிவித்துள்ளார்.
நட்சத்திர கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி சிங் தோனி இணைந்து தோனி என்டர்டெயின்மென்ட் என்கிற திரைப்படத்தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி, அதில் முதல் திரைப்படமாக அறிமுக இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் எல்ஜிஎம் (லெட்ஸ் கெட் மேரிட்) என்கிற தமிழ் படத்தை தயாரித்துள்ளனர்.
ஹரீஸ் கல்யாண், இவானா நடித்துள்ள ‘எல்ஜிஎம்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் வருகிற ஜூலை 28ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், தயாரிப்பாளரான சாக்ஷி சிங் தோனி இதற்கான புரோமோஷன் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதோடு, பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.
அந்த வகையில் ஹைதராபாத்தில் நடைபெற்ற புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சாக்ஷி சிங் தோனி பல சுவாரஸ்யமான கருத்துக்களை செய்தியாளர்களிடம் பகிர்ந்துக் கொண்டார்.அப்போது அவர் கூறியதாவது:
”மொழி என்பது தோனிக்கும், தமிழ்மக்களுக்கு தடையாக இருந்தது கிடையாது. இந்த படத்திற்கு தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கண்டிப்பாக இந்த திரைப்படம் எல்லோருக்கும் நல்ல அனுபவத்தை கொடுக்கும். சமீபத்தில் தோனி படத்தை பார்த்தார், படம் நன்றாக வந்துள்ளது. எங்களுக்கு படம் பிடித்துள்ளது. தோனியை வைத்து படம் எடுத்தால், அதை ஆக்ஷன் படமாக எடுப்பேன்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM