சிறுநீரக மாற்றுசத்திரகிசிச்சைக்கு அவசியமான மருந்திற்கு தட்டுப்பாடு நிலவுவதன் காரணமாக சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன என சிலோன்டுடே தெரிவித்துள்ளது.
சிறுநீரகமாற்று சத்திரசிகிச்சைக்கு முன்னதாக நோயாளிக்கு குறிப்பிட்ட வகை மருந்தினை வழங்கவேண்டும்சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொள்வதற்கு முன் மேற்கூறிய மருந்தை சம்பந்தப்பட்ட நோயாளிக்கு தவறாமல் கொடுக்க வேண்டும் என்றும் அதன் மூலம் மாற்றப்பட்ட சிறுநீரகம் உடனடியாக நிராகரிக்கப்படுவது தடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
எனினும் இந்தமருந்போத்தல் ஒன்றின் விலை 300.000 ரூபாய் எனவும் சிறுநீரகமாற்று சத்திரசிகிச்சை இடம்பெறும் மருத்துவமனைகளில் இந்த மருந்துமுற்றாக இல்லை எனவும் தகவல்கள் கிடைத்துள்ளதாக சிலோன் டுடே தெரிவித்துள்ளது.
தனியார் மருத்துவமனைகளிலும் இந்த மருந்திற்கு தட்டுப்பாடு நிலவுகின்றது இந்த மருந்திற்கு மாற்றீடான மருந்து தனியார்வைத்தியசாலையில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த போத்தல் ஒன்றின் விலை 60,000 ரூபாய் எனவும் நோயாளியின் உடல் எடையின் அடிப்படையில் இந்த மருந்தினைஏற்றுவதென்றால் 400000ரூபாய் செலவாகும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பத்திற்கும் மேற்பட்ட நோயாளர்கள் சிறுநீரக நோய்கள் தொடர்பான தேசிய நிறுவகத்தில் சத்திரசிகிச்சைக்காக காத்திருக்கின்றனர் வாராந்தம் இரண்டு சத்திரசிகிச்சைகளே இடம்பெறுகின்றன என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM